‘ஆப்ரேஷன் சக்சஸ் அக்யூஸ்ட் அரெஸ்ட்’ - சிங்கம்...சிங்கம்.... கரூர் எஸ்பிக்கு மக்கள் பாராட்டு
பொதுமக்கள் தங்கள் பகுதியில் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்பவர்கள் பற்றி தகவலை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கைப்பேசி எண் 9498188488 என்ற எண்ணிற்கு நேரடியாக தெரிவிக்கலாம்.
ஆப்ரேஷன் சக்சஸ் அக்யூஸ்ட் அரெஸ்ட்.
கரூர் மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக கஞ்சா மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு special drive நடத்தப்பட்டது. அதில் கடந்த இரண்டு நாட்களில் கஞ்சா விற்பனை செய்தவர்கள் மீது 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 16 நபர்கள் கைது செய்யப்பட்டும், சுமார் மூன்று லட்சம் மதிப்புள்ள 5 கிலோ கஞ்சாவை கைப்பற்றியும், இவ்வழக்கில் தொடர்புடைய ஒரு கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை கைப்பற்றப்பட்டது. மேலும், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்தவர்கள் மீது 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 45 நபர்கள் கைது செய்யப்படும், 40 ஆயிரம் மதிப்புள்ள 31 கிலோ குட்கா பொருட்களை கைப்பற்றப்பட்டது.
மேலும், கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 55 நபர்கள் மீது பிரிவு 110 இன் கீழ் நடவடிக்கை எடுத்து கோட்ட நிர்வாக நடுவர் அவர்களிடம் ஆஜர் செய்யப்பட்டு நன்னடத்தை பினையம் பெறப்பட்டுள்ளது. அவ்வாறு பினை ஆவணம் பெறப்பட்ட மேற்படி நபர்கள் மீண்டும் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையில் ஈடுபட்டால் ஒரு ஆண்டு வரை சிறையில் வைக்கப்படுவர் என கடுமையாக தெரிவித்தனர்.
வீட்டில் குட்கா பொருட்களைப் பதுக்கிய சில்லறை விற்பனை செய்த நபரை கைது செய்த போலீசார்
தாந்தோணி மலை காவல் நிலைய தனிப்பிரிவு காவலருக்கு தாந்தோணிமலை என்.ஜி.ஓ நகர் பகுதியில் உள்ள சேகர், 31/22, த/பெ ரவிச்சந்திரன் என்பவர் வீட்டில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து சில்லறை விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின் படி தாந்தோணிமலை உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களுடன் சோதனை செய்ததில் சேகர் என்பவரது வீட்டில் சுமார் 14 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டு சேகரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும், சேகரிடம் இருந்து குட்கா பொருட்களை வாங்கி தாந்தோணிமலைப் பகுதியில் விற்பனை செய்யும் 1.கார்த்திக், த/பெ ராமதாஸ், முத்துலாடம்பட்டி 2.வெங்கடேஷ் த/பெ குமார், முத்துலாடம்பட்டி 3.முத்துசாமி, த/பெ ஆறுமுகம், விக்னேஸ்வரா நகர் 4.பாக்கியராஜ், த/பெ லட்சுமணன், சத்தியமூர்த்தி நகர் 2-வது கிராஸ் ஆகியோர்களிடமிருந்து சுமார் மூன்று கிலோ குட்கா பொருட்களை கைப்பற்றி கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
கரூர் மக்களுக்கு காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதம் கூடுதல் தகவல்.
பொதுமக்கள் தங்கள் பகுதியில் குட்கா அல்லது கஞ்சா விற்பனை குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். பொதுமக்கள் தங்கள் பகுதியில் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்பவர்கள் பற்றி தகவலை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கைப்பேசி எண் 9498188488 என்ற எண்ணிற்கு நேரடியாக தெரிவிக்கலாம். கரூர் மாவட்டத்தில் எந்த கடையிலும் குட்கா விற்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும், தங்கள் முயற்சியை முடக்கி விடவும், காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளுக்கு தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்