மேலும் அறிய

போலி இந்திய குடியுரிமை: கனடா செல்ல மதுரையில் பதுங்கிய இலங்கையர் 23 பேர் கைது!

திருட்டுத்தனமாக இந்தியா வந்த இலங்கையர்கள், மதுரையில் பதுங்கி போலி இந்திய குடியுரிமை மூலம் கனடா செல்ல திட்டமிட்டது தெரியவந்தது.

இலங்கையிலிருந்து சட்ட விரோதமாக, மதுரை வழியே வெளிநாடு தப்ப முயன்ற 23- நபர்கள் மற்றும் முகவரை நக்சலைட் தடுப்பு பிரிவு போலீஸ் கைது செய்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன் இலங்கையில் இருந்து கள்ளதோணி வழியாக  தூத்துக்குடிக்கு மொத்தம் 23- நபர் தப்பினர். இவர்களில் 21- நபர்கள் இலங்கை தமிழர்கள் மற்ற இருவர் இலங்கையை சேர்ந்த சிங்களவர். இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து  வாகனம் மூலமாக மதுரை வந்து, மதுரை கப்பலூர் அருகே உள்ள பாழடைந்த தொழிற்சாலை ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.

போலி இந்திய குடியுரிமை: கனடா செல்ல மதுரையில் பதுங்கிய இலங்கையர் 23 பேர் கைது!

இலங்கையை சேர்ந்த நபர்களுக்கு கனடா நாட்டிற்கு அனுமதி இல்லாத நிலையில், மதுரையில் உள்ள முகவர் காசிவிஸ்வநாதன் என்பவர் மூலம் போலி ஆவணம் தயார் செய்யும் பணி நடைபெற்றுள்ளது. இலங்கையில் இருந்து தப்பிய நபர்கள், கனடாவிற்கு  உறுதியாக செல்லவேண்டும் என பல்வேறு முயற்சி எடுத்துவந்துள்ளனர். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளுக்கு செல்வதற்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், மதுரையிலேயே தலைமறைவாக இருந்துள்ளனர். போலி ஆவணங்கள் தயாரித்து இலங்கை சேர்ந்தவர்களை நாடு கடத்த முயற்சி செய்வதாக நக்சல் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து கப்பலூர் பகுதியைச் சேர்ந்த காசிவிஸ்வநாதன் என்பவரை கைது செய்த காவல்துறையினர் அவரது, கட்டுப்பாட்டில் இருந்த 23 இலங்கையை சேர்ந்த வாலிபர்களையும் கைது செய்தனர்.

‛ட்ரீட்’ கேட்டு தொல்லை தந்த அதிகாரி; மதுரையில் மடக்கி பிடித்தது சிபிஐ!

மேலும் அவரிடம் இருந்து போலியான ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அவர்களை மதுரையில் தங்க வைக்க உதவியதாக தலைமறைவாக உள்ள இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில் 23-பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்னதாக அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இலங்கையை சேர்ந்த 23-பேர் கள்ளதோணி மூலமாக மதுரைக்கு தப்பி வந்த விவகாரம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலி இந்திய குடியுரிமை: கனடா செல்ல மதுரையில் பதுங்கிய இலங்கையர் 23 பேர் கைது!

இது குறித்து காவல்துறையினர் சிலர் நம்மிடம்...,” இலங்கையில் இருந்து தப்பித்த நபர்கள் தூத்துக்குடி கடரோல பகுதியில் சுற்றி வந்துள்ளனர். ஊரடங்கு சமயத்தில் கடலோர பகுதியில் சுற்றுவந்தால் கண்டிப்பாக மாட்டிக் கொள்வோம் என மதுரை வந்தடைந்தனர். கப்பலூர் பகுதியில் பல்வேறு நிறுவனங்கள் இயங்காத சூழலில் இலங்கையில் இருந்து தப்பித்த நபர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். எனினும் உணவு தேவை உள்ளிட்டவைகள் பூர்த்தி செய்வதில் சிக்கல் இருந்துள்ளது. இதனால் அடிக்கடி சிலர் மட்டும் வெளியே சென்று உணவு வாங்கிவந்துள்ளனர். ஆனால் இவர்கள் சுற்றிவந்தது, நக்சலைட் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் தப்பி வந்த 23 மூன்று நபர்களையும் திட்டம் தீட்டி பிடுத்துவிட்டனர். இது தொடர்பாக இன்னும் பலர் சிக்கலாம்” என தெரிவித்தனர்.

இதை மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ‛ட்ரீட்’ கேட்டு தொல்லை தந்த அதிகாரி; மதுரையில் மடக்கி பிடித்தது சிபிஐ!

தலைப்பு செய்திகள்

3 வயது பிஞ்சுவைக் கொன்று பாத்ரூம் நாடகமாடிய தாயும் கள்ளக்காதலனையும் குண்டாஸில் தூக்கிய எஸ்.பி - மயிலாடுதுறையில்பரபரப்பு
3 வயது பிஞ்சுவைக் கொன்று பாத்ரூம் நாடகமாடிய தாயும் கள்ளக்காதலனையும் குண்டாஸில் தூக்கிய எஸ்.பி - மயிலாடுதுறையில்பரபரப்பு
திண்ணையில் தூங்கிய 56 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !! சிசிடிவியில் சிக்கிய கொடூரன்
திண்ணையில் தூங்கிய 56 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !! சிசிடிவியில் சிக்கிய கொடூரன்
" நான் ஒருத்தர கொலை பண்ணிட்டேன் " நள்ளிரவில் காவல் நிலையத்தில் சரணடைந்த நபர்
நீதிமன்றத்தில் ரத்தக் களறி! 15 நாள் சிறை தண்டனையால் ஆத்திரம் - நீதிபதி முன் கையை அறுத்துக் கொண்ட கைதி!
நீதிமன்றத்தில் ரத்தக் களறி! 15 நாள் சிறை தண்டனையால் ஆத்திரம் - நீதிபதி முன் கையை அறுத்துக் கொண்ட கைதி!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
மைலேஜ் மன்னன் யார்? பட்ஜெட், சேஃப்டி; நாட்டின் பெஸ்ட் 100 சிசி பைக்குகள் லிஸ்ட், ஒப்பீடு!
மைலேஜ் மன்னன் யார்? பட்ஜெட், சேஃப்டி; நாட்டின் பெஸ்ட் 100 சிசி பைக்குகள் லிஸ்ட், ஒப்பீடு!
Dharmendra Pradhan Resign: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
Platina on EMI: டேங்க்க ஃபில் பண்ணா 800 கிமீ போகலாம்.! வெறும் ரூ.5000 முன்பணம்; பஜாஜ் பிளாட்டினா வாங்க EMI என்ன.?
டேங்க்க ஃபில் பண்ணா 800 கிமீ போகலாம்.! வெறும் ரூ.5000 முன்பணம்; பஜாஜ் பிளாட்டினா வாங்க EMI என்ன.?
Embed widget