மேலும் அறிய

NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?

வெறும் 24 நிரந்தர ஊழியர்களுடன் இயங்கும் என்.டி.ஏ; 15 பணியிடங்கள் காலி - மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

நீட், ஜேஇஇ, க்யூட், யுஜிசி நெட் உள்ளிட்ட நாட்டின் அதிமுக்கிய நுழைவுத் தேர்வுகளை நடத்திவரும் தேசியத் தேர்வு முகமை வெறும் 24 நிரந்தரப் பணியாளர்களுடன் மட்டுமே இயங்கி வருவதாகவும், மீதமுள்ள 15 முக்கியப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதாகவும் மத்திய அரசு மாநிலங்களவையில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதும் நீட் ஜேஇஇ, க்யூட், யுஜிசி நெட் உள்ளிட்ட முக்கிய நுழைவுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் நடந்ததாகத் தொடர் சர்ச்சைகள் எழுந்துள்ள சூழ்நிலையில், இந்தத் தகவல் நாடாளுமன்றத்தில் வெளியாகியுள்ளது. இந்தத் தேர்வுகள் அனைத்தையும் என்டிஏதான் நடத்தி வருகிறது.

கல்வித்துறையின் இணையமைச்சர் சுகந்தா மஜும்தார் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்த விவரங்களைத் தெரிவித்தார். தேசியத் தேர்வு முகமைக்காக அரசு மொத்தம் 39 நிரந்தரப் பணியிடங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 24 நிரந்தர ஊழியர்கள் ஆனால், தற்போது அங்கு 24 நிரந்தர ஊழியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். 15 பணியிடங்கள் காலியாக உள்ளன.

ஒப்பந்த அடிப்படையில் நியமனம்

இந்த ஆள் பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில், பிற அரசுத் துறைகளில் இருந்து மாற்றுப் பணியில் வரும் அதிகாரிகளையும், ஒப்பந்த அடிப்படையில் எடுக்கப்படும் ஊழியர்களையும் கொண்டு என்டிஏ தனது அன்றாடப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக 73 ஒப்பந்தப் பணியாளர்களும் 124 அவுட்சோர்ஸிங் பணியாளர்களும் வேலையில் உள்ளனர். ஒப்பந்தப் பணியாளர்களில், பொது மேலாளர் (தகவல் தொடர்பு), ஒரு மூத்த ஆலோசகர், மூன்று ஆலோசகர்கள், ஐந்து மூத்த ஆலோசகர்கள், 44 ஆலோசகர்கள், ஒரு மூத்த மென்பொருள் உருவாக்குநர், ஒரு அலுவலக உதவியாளர் மற்றும் 17 இளம் தொழில் வல்லுநர்கள் உள்ளனர்.

அவுட்சோர்ஸிங் பணியாளர் குழுவில் தரவுப் பகுப்பாய்வாளர்கள், ஆலோசகர்கள், இளநிலை ஆலோசகர்கள், சட்ட உதவியாளர்கள், மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் போன்றோர் உள்ளனர்.

நிரந்தரப் பணியாளர்கள் தவிர்த்து, பாடத்திட்ட வல்லுநர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிபுணர்களையும் தேவைக்கேற்ப குறிப்பிட்ட பணிகளுக்காக என்.டி.ஏ அவ்வப்போது நியமித்துக் கொள்கிறது. வினாத்தாள் தயாரிப்பு, மொழிபெயர்ப்பு போன்ற முக்கியப் பணிகளுக்குத் தனி நிபுணர் குழுக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

தேர்வு நடத்தும் மையங்கள், சிசிடிவி கண்காணிப்பு, பயோமெட்ரிக் வருகைப்பதிவு மற்றும் பிற தளவாடத் தேவைகளுக்கு மூன்றாம் தரப்பு சேவை நிறுவனங்களை என்.டி.ஏ முழுமையாக நம்பியுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மருத்துவ மற்றும் உயர்கல்வி சேர்க்கைக்கான தேர்வு முறைகேடுகள் குறித்த கடுமையான விமர்சனங்கள் நாடு முழுவதும் வலுத்து வரும் வேளையில், இவ்வளவு பெரிய பொறுப்பைக் கையாளும் ஒரு முக்கிய அமைப்பில், நிரந்தரப் பணியாளர்கள் வெறும் 24 பேர் மட்டுமே இருக்கிறார்கள் என்ற தகவல் மாணவர்களையும் பெற்றோர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget