மேலும் அறிய

3 வயது பிஞ்சுவைக் கொன்று பாத்ரூம் நாடகமாடிய தாயும் கள்ளக்காதலனையும் குண்டாஸில் தூக்கிய எஸ்.பி - மயிலாடுதுறையில்பரபரப்பு

மயிலாடுதுறை அருகே 3 வயது குழந்தையைக் கொன்று நாடகமாடிய தாயும் கள்ளக்காதலனும் சிசிடிவி ஆதாரத்தால் கைதாகி குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 3 வயது ஆண் குழந்தையை சுவற்றில் தள்ளி படுகொலை செய்துவிட்டு, பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக நாடகமாடிய தாயையும் அவரது கள்ளக்காதலனையும் செம்பனார்கோவில் காவல் துறையினர் சிசிடிவி ஆதாரங்கள் மூலம் அதிரடியாகக் கைது செய்தனர். தற்போது இவ்வழக்கில் தொடர்புடைய இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.

சம்பவம் பின்னணி

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, ஆலவேலி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கனிவண்ணன் (31) என்பவருக்கும், கவிப்பிரியா (25) என்பவருக்கும் கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 6 வயதிலும் 3 வயதிலும் இரண்டு ஆண் குழந்தைகள் இருந்தன. திருமணத்திற்கு முன்பே கவிப்பிரியாவுக்கு அரிவேளூர் கிராமத்தைச் சேர்ந்த அபினேஷ் (25) என்பவருடன் பழக்கம் இருந்துள்ளது. தனியார் நுண்கடன் நிறுவனத்தில் பணிபுரிந்த அபினேஷுடன் கவிப்பிரியாவுக்குத் திருமணத்திற்குப் பிறகும் தொடர்பு நீடித்து, நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது.

பாத்ரூமில் விழுந்ததாக நாடகம்

மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்ததால் தம்பதியிடையே தகராறு ஏற்பட்டு, கவிப்பிரியா குழந்தைகளுடன் ஆக்கூர் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். அங்கு அபினேஷ் அடிக்கடி வந்து சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் 25-ஆம் தேதி, 3 வயது இளைய மகனை பலத்த காயங்களுடன் கவிப்பிரியா மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். குழந்தை பாத்ரூமில் விளையாடியபோது வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டதாக மருத்துவர்களிடம் தெரிவித்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட குழந்தை, சிகிச்சை பலனின்றி ஜூன் 29-ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தது.

சிசிடிவி ஆதாரம் & கொடூரக் கொலை அம்பலம்

குழந்தையின் மரணத்தில் சந்தேகமடைந்த தந்தை கனிவண்ணன் அளித்த புகாரின் பேரில், செம்பனார்கோவில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவத்தன்று தான் ஊரிலேயே இல்லை என அபினேஷ் சாதிக்க முயன்ற நிலையில், அப்பகுதியில் இருந்த சிசிடிவி (CCTV) கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது அபினேஷ் வீட்டிற்குள் சென்று வந்த காட்சிகள் சிக்கின. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் உண்மையை ஒப்புக் கொண்டனர்.

கொலைக்கான காரணம்

தாய் தண்ணீர் பிடிக்க வெளியே சென்றபோது குழந்தை தொடர்ந்து அழுது அடம் பிடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அபினேஷ் குழந்தையை கீழே தள்ளியதில், சுவற்றில் தலை மோதி உள்காயம் ஏற்பட்டு குழந்தை மயங்கியுள்ளது. பின்னர் பழியை மறைக்க இருவருமாகச் சேர்ந்து பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக நாடகமாடியது அம்பலமானது.

குண்டர் சட்டத்தில் அதிரடி நடவடிக்கை

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்கு மாற்றம் செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட எதிரிகள் அபினேஷ் மற்றும் கவிப்பிரியா ஆகிய இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. B. சினேஹா ப்ரியா மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். மாவட்ட ஆட்சியரின் உத்தரவைத் தொடர்ந்து, 24.07.2026 அன்று அபினேஷ் கடலூர் மத்திய சிறையிலும், கவிப்பிரியா திருச்சிராப்பள்ளி மகளிர் தனிச்சிறையிலும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டனர்.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடுமையாக எச்சரித்துள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

3 வயது பிஞ்சுவைக் கொன்று பாத்ரூம் நாடகமாடிய தாயும் கள்ளக்காதலனையும் குண்டாஸில் தூக்கிய எஸ்.பி - மயிலாடுதுறையில்பரபரப்பு
3 வயது பிஞ்சுவைக் கொன்று பாத்ரூம் நாடகமாடிய தாயும் கள்ளக்காதலனையும் குண்டாஸில் தூக்கிய எஸ்.பி - மயிலாடுதுறையில்பரபரப்பு
ABP Exclusive: திருவண்ணாமலை கோயிலில் பக்தர்கள் சந்திக்கும் சிக்கல்கள் இவ்வளவா? தீர்வு காணுமா தவெக அரசு?
ABP Exclusive: திருவண்ணாமலை கோயிலில் பக்தர்கள் சந்திக்கும் சிக்கல்கள் இவ்வளவா? தீர்வு காணுமா தவெக அரசு?
தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னைக்கு எப்படி? - வானிலை வார்னிங்
தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னைக்கு எப்படி? - வானிலை வார்னிங்
நீட் போராட்டத்தில் GenZ திமுக-வினரை விரட்டிவிட்ட மாணவர்கள்! நடந்தது என்ன?
நீட் போராட்டத்தில் GenZ திமுக-வினரை விரட்டிவிட்ட மாணவர்கள்! நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
Tata Tiago EMI: வெறும் ரூ.50 ஆயிரம் போதும்; டாடா டியாகோ பட்ஜெட் காரை சொந்தமாக்கலாம்! 4 ஆண்டு லோன்- இதோ EMI!
Tata Tiago EMI: வெறும் ரூ.50 ஆயிரம் போதும்; டாடா டியாகோ பட்ஜெட் காரை சொந்தமாக்கலாம்! 4 ஆண்டு லோன்- இதோ EMI!
MK STALIN : “Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
“Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
Actress Jyothika : அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
Chengalpattu metro rail : அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
Thirumavalavan:
Thirumavalavan: "தர்மேந்திர பிரதான் பாவம்.." திருமாவளவன் திடீரென ஏன் அப்படி பேசினார்?
Idukku Pillayar Temple : திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் ஷாக் சம்பவம்.! இடுக்கில் சிக்கி பக்தர் பலி- நடந்தது என்ன.?
திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் ஷாக் சம்பவம்.! இடுக்கில் சிக்கி பக்தர் பலி- நடந்தது என்ன.?
Embed widget