மேலும் அறிய

டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?

டெல்லி மாணவர்களின் தொடர் போராட்டம் வாபஸ்; 3 கோரிக்கைகளையும் ஏற்ற மத்திய அரசு- சிஜேபி அறிவிப்பு

டெல்லியில் நடைபெற்று வந்த தொடர் போராட்டத்தை அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெற்றது கரப்பான் ஜனதா கட்சி - அரசுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த சில வாரங்களாக நீட் வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளை வலியுறுத்தி, கரப்பான் ஜனதா கட்சி சார்பில் நடைபெற்று வந்த மாபெரும் தொடர் போராட்டம் இன்று அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

அமைச்சர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட மத்திய அரசின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில் சுமுகமான உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, போராட்டத்தைக் கைவிடுவதாக அக்கட்சியின் தேசியத் தலைமை அறிவித்துள்ளது.

என்னென்ன கோரிக்கைகள்?

மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும். இரண்டாவதாக, நீட் தேர்வால் உயிரிழந்த அனைத்து மாணவர்களின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மூன்றாவதாக, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தத் தர்ணா போராட்டத்தைத் தொடங்கினர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் இந்தப் போராட்டத்தில் பகல் இரவு பாராமல் தொடர்ச்சியாகப் பங்கேற்று தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இதனால், டெல்லி தலைநகர் முழுவதும் தொடர்ந்து பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வந்தது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கப் பெருமளவில் காவல்துறையினரும், துணை ராணுவப் படையினரும் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

அவசரப் பேச்சுவார்த்தை

போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு தரப்பில் இருந்து கரப்பான் ஜனதா கட்சியின் உயர்மட்டத் தலைவர்களிடம் அவசரப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழுவினர், கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து பல கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இறுதிக்கட்டக் கூட்டத்தில், சிஜேபியின் கோரிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மத்திய அரசு அளித்த உறுதிமொழியைத் தொடர்ந்து, டெல்லி போராட்டத்தை நல்லெண்ண அடிப்படையில் உடனடியாகக் கைவிடுவதாக கரப்பான் ஜனதா கட்சி அறிவித்துள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
Maharashtra: பிங்க் ரேபிடோவில் ஓட்டுநராக வந்த ஆண்.. ஷாக்கான இளம்பெண்.. கடைசியில் ட்விஸ்ட்!
Maharashtra: பிங்க் ரேபிடோவில் ஓட்டுநராக வந்த ஆண்.. ஷாக்கான இளம்பெண்.. கடைசியில் ட்விஸ்ட்!
அரசு ஊழியர்களின் சம்பளம் 3 மடங்கு உயருமா? 8ஆவது சம்பள கமிஷனில் புதிய பரிந்துரை!
அரசு ஊழியர்களின் சம்பளம் 3 மடங்கு உயருமா? 8ஆவது சம்பள கமிஷனில் புதிய பரிந்துரை!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்
Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
Embed widget