மேலும் அறிய

Dharmendra Pradhan Resign: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தொடங்கிய போராட்டம் பலனளித்துள்ளது. அவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ளார்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தொடங்கிய போராட்டத்தின் தாக்கம் வெளிப்படையாகத் தெரிந்தது. நாட்டின் அரசாங்கம் ஜென்-Z தலைமுறைக்கு அடிபணிந்துள்ளது. மாணவர்களின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ளார்.

“சூழ்நிலையை தேசவிரோத சக்திகள் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது“

கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ராஜினாமாவை ட்விட்டரில் பதிவிட்டார். அவர், "நான் எனது ராஜினாமாவை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ளேன் . முதல் நாளிலிருந்தே இதற்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன். இந்த சூழ்நிலையிலிருந்து நான் ஒருபோதும் பின்வாங்கியதில்லை. கடந்த 10 நாட்களில் நடந்த நிகழ்வுகளால் நான் வருத்தமடைகிறேன். இது எனக்கு தனிப்பட்ட கௌரவம் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல," என்று குறிப்பிட்டார். ஜந்தர் மந்தரிலும் நாடு முழுவதிலும் நிலவும் சூழ்நிலையை தேசவிரோத சக்திகள் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது என்றும், தேசிய ஒற்றுமை பேணப்பட வேண்டும் என்றும் பிரதான் கூறினார். 

“இளைஞர்களின் உணர்வுகள் மற்றும் நியாயமான எதிர்பார்ப்புகளை நான் மதிக்கிறேன்“

கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது சமூக வலைதள பக்கதில் பதிவிட்ட ராஜினாமா குறித்த அறிவிப்பில், "நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சீர்திருத்தத்திற்காக என்னை அர்ப்பணித்துள்ளேன். ஒரு வலுவான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட கல்வி முறைதான் ஒரு வலிமையான தேசத்தின் அடித்தளம் என்று நான் எப்போதும் நம்புகிறேன். நாட்டின் இளைஞர்களின் அபிலாஷைகள், உணர்வுகள் மற்றும் நியாயமான எதிர்பார்ப்புகளை நான் ஆழ்ந்த மரியாதையுடன் மதிக்கிறேன். இந்தியாவின் இளம் தலைமுறையின் கனவுகளை நிறைவேற்றுவது அரசியல் மற்றும் சமூக வாழ்வில் நம் அனைவரின் தார்மீக அர்ப்பணிப்பாகும். பிரதமரின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ் தேசத்திற்கு சேவை செய்ய எனக்குக் கிடைத்த வாய்ப்பிற்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கேவின் பதிவு

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே ஓர் பதிவை வெளியிட்டார். அதில், "நாம் சாதித்துவிட்டோம். தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துவிட்டார். இதன் மூலம் ஜனநாயகம் வென்றுள்ளது," என்று கூறியுள்ளார்.

சிஜேபியின் முக்கிய கோரிக்கைகள் என்ன.?

முன்னதாக, நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சை தொடர்பாக தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை என்று தலைமை நீதிபதி திட்டவட்டமாகக் கூறியிருந்தார். மேலும், கொடூரமான தாக்குதல்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி கோரியிருந்தார். நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட பின்னர் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் சிஜேபி கோரியது.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Independence Day 2026: 1947-இல் 1 ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிந்தது? தங்கம் விலை எவ்வளவு இருந்தது?
1947-இல் 1 ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிந்தது? தங்கம் விலை எவ்வளவு இருந்தது?
Independence Day 2026: சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் யார்? முதல் பட்ஜெட், தேர்தல் எப்போது நடந்தது? - சுவாரஸ்ய தகவல்கள் இதோ
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் யார்? முதல் பட்ஜெட், தேர்தல் எப்போது நடந்தது? - சுவாரஸ்ய தகவல்கள் இதோ
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget