மேலும் அறிய

மைலேஜ் மன்னன் யார்? பட்ஜெட், சேஃப்டி; நாட்டின் பெஸ்ட் 100 சிசி பைக்குகள் லிஸ்ட், ஒப்பீடு!

100cc பைக்குகள்: ஹோண்டா, ஹீரோ, பஜாஜ்- எந்த பைக்குக்கு மைலேஜ், சேஃப்டி, லுக் அதிகம்? இதோ ஓர் அலசல்!

இந்தியாவின் சிறந்த 100cc மைலேஜ் பைக்குகள்: ஹோண்டா ஷைன், ஸ்பிளெண்டர் மற்றும் பிளாட்டினா- ஓர் ஒப்பீடு

இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் நடுத்தர வர்க்க வாடிக்கையாளர்களின் தினசரி பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்ற சிறந்த 100சிசி மைலேஜ் பைக்குகளாக ஹோண்டா ஷைன் 100, ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் மற்றும் பஜாஜ் பிளாட்டினா 100 உள்ளிட்ட பல்வேறு மாடல்கள் தொடர்ந்து சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

இந்த முக்கிய மாடல்களின் இன்ஜின் திறன், மைலேஜ், வடிவமைப்பு மற்றும் விலை குறித்த முழுமையான ஒப்பீட்டு விவரங்கள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் (Hero Splendor Plus)

வாடிக்கையாளர்கள் மத்தியில் பல ஆண்டுகளாக மிகவும் பிரபலமான இந்த பைக்கின் விலை, அதன் வேரியண்டுகளுக்கு ஏற்ப ரூ.75,441 முதல் ரூ.78,286 வரை சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இது அதிகபட்சமாக ஒரு லிட்டருக்கு 65 - 70 கி.மீ. மைலேஜ் வழங்குகிறது.

தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற கிளாசிக் கம்யூட்டர் வடிவமைப்பைப் பெற்றுள்ள இந்த பைக்கில், அனலாக் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், அலாய் வீல்கள், டிரம் பிரேக்குகள் மற்றும் சிபிஎஸ் பிரேக்கிங் வசதி உள்ளன.

ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe)

ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் பட்ஜெட் பைக்குகளில் முக்கியமானது ஆகும்.  இதன் எடை குறைந்த அமைப்பு மற்றும் மிகக் குறைந்த பராமரிப்பு காரணமாக, இந்த பைக் ஒரு லிட்டருக்கு சுமார் 70 கி.மீ. எரிபொருள் சிக்கனத்தை அளிக்கிறது. தினமும் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு இது மிகவும் ஏற்றதாகும்.

ஹோண்டா ஷைன் 100 (Honda Shine 100)

இந்த பைக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.64,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மைலேஜைப்  பொறுத்தவரை, இது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சிறப்பான முறையில் 60 - 65 கி.மீ வரை மைலேஜ் தருகிறது. இதன் வடிவமைப்பைப் பார்த்தால், இது மிகவும் எளிமையான மற்றும் அன்றாட நடைமுறைக்கு ஏற்ற தோற்றத்தைக் கொண்டுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பிற்காக ஹாலோஜன் ஹெட்லைட், சைட்-ஸ்டாண்ட் இன்ஜின் கட்-ஆஃப் வசதி, அலாய் வீல்கள், டிரம் பிரேக்குகள் மற்றும் சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை நேர்த்தியாக வழங்கப்பட்டுள்ளன. செயல்திறனைப் பொறுத்தவரை, இதில் உள்ள 98.98 சிசி இன்ஜின் அதிகபட்சமாக 7.38 PS பவரையும், 8.05 Nm டார்க்கையும் வெளிப்படுத்தும். இது 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பஜாஜ் பிளாட்டினா 100 (Bajaj Platina 100)

வலிமையான பயன்பாட்டிற்கு சந்தையில் பெயர்போன இந்த பைக்கின் எக்ஸ் ஷோரூம் ஆரம்ப விலை ரூ.67,808 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மைலேஜைப் பொறுத்தவரை, இது சிறப்பான முறையில் லிட்டருக்கு 72 கி.மீ மைலேஜ் வழங்குகிறது. இதன் வடிவமைப்பில், நீண்ட தூரப் பயணத்திற்கும் ஏற்றவாறு மிகவும் சௌகரியமான கூடுதல் நீளமுடைய இருக்கை வசதி கொடுக்கப்பட்டுள்ளது. 

டிவிஎஸ் ஸ்போர்ட் (TVS Sport)

டிவிஎஸ் ஸ்போர்ட் பைக், இந்திய சாலைகளில் ஹைவே மற்றும் நகரப் பகுதிகளில் சுமார் 70 கி.மீ. மைலேஜை அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உறுதியான கட்டமைப்பு, மற்றும் அம்சங்களைத் தேடுகிறீர்கள் என்றால், டிவிஎஸ் ரேடியன் (TVS Radeon) ஒரு சிறந்த தேர்வாகும். ரேடியான் பைக்கில் USB சார்ஜிங் போர்ட், சைடு-ஸ்டாண்ட் இண்டிகேட்டர் மற்றும் வசதியான, அகலமான இருக்கை ஆகியவை உள்ளன. மேலும், இந்த பைக் ஒரு லிட்டருக்கு சுமார் 68 கி.மீ. என்ற  மைலேஜை வழங்குகிறது. 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Honda E Scooters: ஒரே சார்ஜில் இத்தனை கி.மீட்டர் மைலேஜா? பட்ஜெட் விலையில் மாஸான ஹோண்டா இ ஸ்கூட்டர்கள் - என்னென்ன?
Honda E Scooters: ஒரே சார்ஜில் இத்தனை கி.மீட்டர் மைலேஜா? பட்ஜெட் விலையில் மாஸான ஹோண்டா இ ஸ்கூட்டர்கள் - என்னென்ன?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget