மேலும் அறிய

‛ட்ரீட்’ கேட்டு தொல்லை தந்த அதிகாரி; மதுரையில் மடக்கி பிடித்தது சிபிஐ!

‛ட்ரீட்’ என்கிற பெயரில் லஞ்சம் கேட்ட மத்திய பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் மற்றும் ஒப்பந்தகாரர்  என மூவரையும்  சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள மத்திய பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நிர்வாக பொறியாளராக பாஸ்கரன் இருந்துவருகிறார். இவர் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வந்தன. பாஸ்கரன் தன்னுடைய துறை சார்ந்த பணிகள் அனைத்திற்கும் லஞ்சப் பணம் பெற்றுக் கொள்வதாக கூறப்படுகிறது. சொகுசு பங்களா, சொகுசு கார்கள் வாங்குவதிலும் அதிக நாட்டம் கொண்டவர் என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொரு புராஜெக்ட் முடிந்த பின்னரும் டிரீட் கொடுக்க சொல்லி தொல்லை செய்வாராம்.


‛ட்ரீட்’ கேட்டு தொல்லை தந்த அதிகாரி; மதுரையில் மடக்கி பிடித்தது சிபிஐ!

இந்நிலையில் பாஸ்கரன் சிலரிடம் தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை செய்துவந்துள்ளார். இதனால் சம்மந்தப்பட்ட நபர் சி.பி.ஐ அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாஸ்கரனை சி.பி.ஐ  தொடர்ந்து மறைமுகமாக கண்காணித்து வருகிறது. இதனடிப்படையில் பாஸ்கரனின் செல்போனுக்கு வரும் அழைப்புகள்  மற்றும் எஸ்.எம்.எஸ்களையும் சி.பி.ஐ. காவல்துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் அவரது செல்போன் உரையாடலின் போது மத்திய பொதுப்பணித்துறை ஒப்பந்த பணிகளை எடுத்து நடத்தி வந்த ஒப்பந்தகாரர்களான சிவசங்கர ராஜா, நாராயணன் ஆகிய இருவரும் ’தங்களுக்கு சேர வேண்டிய பணிக்கான தொகை மற்றும் ஜி.எஸ்.டி கட்டணத்தையும் திரும்ப பெறுவதற்கான பணத்தையும்’ கேட்டுள்ளனர். உடனடியாக திருப்பி தரவேண்டும் என்றால் தனக்கு ரூ.1 லட்சத்தி 50 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என பாஸ்கரன் கூறியுள்ளார்.


‛ட்ரீட்’ கேட்டு தொல்லை தந்த அதிகாரி; மதுரையில் மடக்கி பிடித்தது சிபிஐ!

 

மேலும் தனக்கு தர வேண்டிய லஞ்ச பணத்தினை வீட்டிற்கு வந்து  கொடுக்குமாறும் கூறியுள்ளார்.  இதனை சி.பி.ஐ. போலீசார் பதிவு செய்து கொண்டனர்.  இதனையடுத்து போனில் பேசியபடி நேற்று முன்தினம் இரவில் மதுரை மீனாம்பாள்புரம் பகுதியில் உள்ள குடியிருப்பில் பாஸ்கரின் வீட்டுக்கு ஒப்பந்தகாரர்களான சிவசங்கர் ராஜா மற்றும் சென்னையை சேர்ந்த நாராயணன் ஆகிய  இருவரும் லஞ்சப்பணத்தை கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கொண்டுவந்த லஞ்ச பணத்தை கட்டுக் கட்டாக நிர்வாக பொறியாளர் பாஸ்கரன் வாங்கும்போது அங்கு மறைந்திருந்து கண்காணித்த சி.பி.ஐ. காவல்துறை அதிகாரிகள், நிர்வாக பொறியாளர் பாஸ்கரன் மற்றும் அவரிடம் லஞ்சம் கொடுத்த ஒப்பந்தகாரர் சிவசங்கர் ராஜா மற்றும் நாரயணன் ஆகிய மூவரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.


‛ட்ரீட்’ கேட்டு தொல்லை தந்த அதிகாரி; மதுரையில் மடக்கி பிடித்தது சிபிஐ!

பின்னர் அவர்கள் மூன்று பேரையும்  மதுரையில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்திய நிலையில் மூவருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி எம்.சிவபிரகாசம் உத்தரவிட்டார்.


‛ட்ரீட்’ கேட்டு தொல்லை தந்த அதிகாரி; மதுரையில் மடக்கி பிடித்தது சிபிஐ!

மதுரையில் லஞ்சம் பெற முயன்ற மத்திய பொதுப்பணித்துறை மண்டல நிர்வாக பொறியாளர் மற்றும் லஞ்சம் கொடுக்க முயன்ற இருவரையும் சேர்த்து சி.பி.ஐ போலிசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சி.பி.ஐ காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுதல்களை பெற்றுவருகிறது. இது போன்று லஞ்சம், ஊழலில் திளைக்கும்  அதிகாரிகள் மீது துறைரீதியாக கடுமையான நடவடிக்கைள் எடுக்கும் போது, பிற அதிகாரிகளுக்கு அச்சம் ஏற்படும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

மதுரையில் இன்றைய கொரோனா அப்டேட் தகவல் -மதுரை : குறையும் தொற்று : தடுப்பூசி தட்டுப்பாட்டால் ஏமாற்றத்துடன் திரும்பும் மக்கள் ! இருப்புநிலை என்ன?

தலைப்பு செய்திகள்

‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
போக்குவரத்து விதிமீறல்; ஒரே மாதத்தில் 3000 வழக்குகள், 45 லட்சம் ரூபாய் அபராதம்.. காரைக்கால் போலீசார் அதிரடி நடவடிக்கை..!
போக்குவரத்து விதிமீறல்; ஒரே மாதத்தில் 3000 வழக்குகள், 45 லட்சம் ரூபாய் அபராதம்.. காரைக்கால் போலீசார் அதிரடி நடவடிக்கை..!
சாந்தங்குடி காதலர்கள் தற்கொலை பின்னணி என்ன? பொய்யான பிரச்சாரங்களுக்கு எதிராகக் களமிறங்கிய சிபிஎம்!
சாந்தங்குடி காதலர்கள் தற்கொலை பின்னணி என்ன? பொய்யான பிரச்சாரங்களுக்கு எதிராகக் களமிறங்கிய சிபிஎம்!
Crime News: 5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த ஆசிரியை - காரணம் என்ன? கொதித்து எழுந்த பெற்றோர்
5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த ஆசிரியை - காரணம் என்ன? கொதித்து எழுந்த பெற்றோர்

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Skoda Slavia Facelift: ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
Tata Mini Sierra: ‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
Avore EX Electric Bike: ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
Embed widget