மேலும் அறிய

சிவகங்கை லாக்கப் மரணம் தொடர்பாக 5 போலீசார் கைது, காந்திருந்த கரை வேஷ்டிகள் யார்?

அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் கொலை வழக்காக மாற்றி, 5 போலீசாரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளனர்.

அஜித்குமார் உடல் அரசு ராஜாஜி மருத்துவமனையில், அவரது உடல் வாங்கும் வரைம் காத்திருந்தது கரை வேஷ்டிகள் யார் என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.

நகை  காணவில்லை என வாய்மொழியாக புகார் கொடுத்திருக்கின்றனர்
 
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தை சேர்ந்த அஜித் குமார் என்பவர் மடபுரத்தில் உள்ள அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளி அம்மன் கோயிலில் ஒப்பந்த அடிப்படையில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் ஒரு தாயும் மகளும் ஒரு காரில் வந்தவர்கள் நடக்கமுடியாததால் சக்கர வண்டி வேண்டும் என்று கேட்டதன்பெயரில் அஜித்குமார் உதவி செய்திருக்கிறார். அவரிடமே காரின் சாவியை கொடுத்து வேறு ஒரு இடத்தில் நிறுத்தும்படி கூறியிருக்கின்றனர். கார் ஓட்ட தெரியாத அஜித்குமார் வேறு ஒரு நண்பரின் உதவியுடன் காரை வேறு இடத்தில் நிறுத்தியிருக்கிறார். மதியம் 12 மணி போல் வழிபாடு முடிந்து திரும்பி வந்த அப்பெண்கள் கேட்டதும் மீண்டும் காரை எடுத்து அவர்களுக்கு கொடுத்து, அவர்களும் திரும்பி சென்று விட்டனர். மதியம் 2 மணி அளவில் திருப்புவனம் காவல் நிலையம் வந்த அப்பெண்கள் பர்சில் வைத்திருந்த பணம் ரூபாய் 2,500ம் பத்துப்பவுன் நகையும் காணவில்லை என்று வாய்மொழியாக புகார் கொடுத்திருக்கின்றனர்.
 
சித்திரவதை தாங்க முடியவில்லை
 
காவல் நிலையத்தில் கேட்டுக்கொண்டதன் பேரில் கோவில் நிர்வாக அலுவலர்கள் மாலை 7 மணி அளவில் அஜித்குமாரைக் காவல்நிலையத்தில் ஒப்படைத்திருக்கின்றனர். ஆய்வாளரும் சார்பாய்வாளரும் விசாரித்து மானாமதுரையில் உள்ள துணை காவல் கண்காணிப்பாளரின் சிறப்பு படையினரிடம் அஜித்குமார், அவனின் தம்பி நவீன்குமார், காரை நிறுத்த உதவி செய்த நபர் மற்றும் 2 பேர் ஆகிய ஐந்துபேரை விசாரணைக்காக கூட்டிச்சென்று திருப்புவனம் கால்நடை மருத்துவமனை அருகில் உள்ள சீச்சாச்சேரி களம், மடப்புரம் விலக்கு மாணவர்கள் விடுதிக்குப்பின்புறம், பேருந்து டிப்போ பின்புறம் உள்ள ஆற்றோரப் பாதை ஆகிய மூன்று இடங்களில் வைத்து அடுத்தநாள் மாலைவரை அடித்து விசாரணை செய்துள்ளனர். சித்திரவதை தாங்காமல் 
எல்லோரும் இருக்கும் இடத்திற்கு சென்றால் யாராவது தலையிட்டு காப்பாற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் மடப்புரம் கோவில் உதவி ஆணையாளர் அலுவலகத்தின் பின்புறம் கூட்டி சென்றால் எடுத்து தருகிறேன். என்று அஜித்குமார் கூறியதை கேட்டு அங்கே கூட்டிச் சென்ற காவலர்கள் அங்கு உள்ள மாட்டுக் கொட்டகையில் வைத்து கேட்டபோது உங்கள் சித்திரவதை தாங்காமல்தான் அவ்வாறு கூறினேன், நகை திருட்டுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளார்.
 
அஜித்குமாரின் உடல் அரசு ராஜாஜி மருத்துவமனையில்
 
அதனால் ஆத்திரம் அடைந்த காவலர்கள் அவன் காலில் ஒருவரும் தலைப்பகுதியில் ஒருவரும் ஏறிநின்று பலம் கொண்ட மட்டும் அடித்து தாக்கியதில் 28 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 7 மணிக்கு சிறுநீரகத்தில் ரத்தம் கலந்து வருவதை கண்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் ஒரு ஆட்டோவில் ஏற்றி தனியார் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுள்ளனர். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால் அரசு மருத்துவமனைக்கு சென்ற பொழுது இறந்து விட்டதாக கூறியுள்ளனர். உடனே அஜீத் குமாருடன் கூட்டிச்சென்ற அனைவரிடமும் கையெழுத்து வாங்கிக்கொண்டு அனுப்பிவிட்டனர். அஜித்தின் உடலானது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.
 
5 போலீசார் கைது
 
ராஜாஜி மருத்துவமனையில் உள்ள உடற்கூறாய்வு செய்யும் இடத்தில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் கிட்டத்த 5 மணி நேரமாக உடற்கூறாய்வு செய்யப்பட்டத்தில் உடல் 18 இடங்களில் காயம் ஏற்பட்டது தெரியவந்தது. அதே போல் விசாரணையின் போது தப்பித்து ஓட முயற்சித்து வலிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்ததாக திருப்புவனம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர், என்ற தகவலும் வெளிவந்துள்ளது. இந்நிலையில் அஜித் குமார் உயிரிழப்பு தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் கொலை வழக்காக மாற்றி, 5 போலீசாரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளனர்.
 
கரை வேஷ்டிகள் யார்?
 
அதே போல் அஜித்குமார் உடல் அரசு ராஜாஜி மருத்துவமனையில், அவரது உடல் வாங்கும் வரைம் காத்திருந்தது யார் என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது. அவர்கள் அஜித்தின் குடும்பத்தினரை மிரட்டினார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
 
தலைப்பு செய்திகள்

டியூசன் மாஸ்டரை கொல்ல திட்டம்... கையில் குண்டு வெடித்து சிதைந்த கை!
டியூசன் மாஸ்டரை கொல்ல திட்டம்... கையில் குண்டு வெடித்து சிதைந்த கை!
சீர்காழியில் பரபரப்பு: வீதிக்கு வர அஞ்சும் மக்கள் - ஓட ஓட விரட்டி 4 பேரை கடித்து குதறிய வெறிநாய்!
சீர்காழியில் பரபரப்பு: வீதிக்கு வர அஞ்சும் மக்கள் - ஓட ஓட விரட்டி 4 பேரை கடித்து குதறிய வெறிநாய்!
பாங்காக் விமானத்தில் வந்த 'கடத்தல் குருவி': சென்னை ஏர்போர்ட்டில் மடக்கிப் பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள்!
பாங்காக் விமானத்தில் வந்த 'கடத்தல் குருவி': சென்னை ஏர்போர்ட்டில் மடக்கிப் பிடித்த அதிகாரிகள்!
மயிலாடுதுறை பரபரப்பு: கணவர் தற்கொலைக்குக் காரணமான கள்ளக்காதலன் கைது; தப்பியோடிய மனைவிக்கும் வலைவீச்சு!
மயிலாடுதுறை பரபரப்பு: கணவர் தற்கொலைக்குக் காரணமான கள்ளக்காதலன் கைது; தப்பியோடிய மனைவிக்கும் வலைவீச்சு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
AUS vs BAN: வங்கதேசத்தை சுருட்டி வீசிய ஸ்டார்க்.. பதில் தாக்குதல் நடத்தும் நாகின் பாய்ஸ்! அனல்பறக்கும் 2வது டெஸ்ட்
AUS vs BAN: வங்கதேசத்தை சுருட்டி வீசிய ஸ்டார்க்.. பதில் தாக்குதல் நடத்தும் நாகின் பாய்ஸ்! அனல்பறக்கும் 2வது டெஸ்ட்
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
Embed widget