மேலும் அறிய
சிவகங்கை மீனவ இளைஞர்களுக்கு குடிமைப் பணி பயிற்சி: கனவு நனவாகும் வாய்ப்பு.. விண்ணப்பிக்க கடைசி தெரியுமா?
கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர்
Source : whats app
சிவகங்கை மாவட்டம் மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணிகளுக்கான போட்டித் தேர்வில் சிறந்து விளங்கிடும் வகையில், ஆயத்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தகவல்.
குடிமைப் பணிகளுக்கான போட்டித்தேர்வு
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையம் இணைந்து, ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குடிமைப் பணிகளுக்கான போட்டித்தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் ஆணை வழங்கப்பட்டது. கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் (Application Form) மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை (Guidelines) சிவகங்கை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் கட்டணமின்றி பெற்று கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய எப்படி
மேலும், விண்ணப்பதாரர் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பூர்த்தி செய்து சிவகங்கை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 25.11.2025 அன்று மாலை 05.00 மணிக்குள் கிடைக்கப்பெறும் வகையில் விண்ணப்பித்தல் வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகம், 5/3, யூனியன் வங்கி மேல்தளம், பெருமாள் கோயில் தெரு, சிவகங்கை - 630 561 என்ற முகவரியில் நேரிலோ அல்லது மீன்வள ஆய்வாளர் அவர்களை 9384824553 என்ற அலைபேசி எண்ணிலும் மற்றும் மீன்வள மேற்பார்வையாளர் தரம் II –அவர்களை 9790656919 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















