அதிர்ச்சி.. ”செத்ததுபோல நடிக்கிறான்..” : Home work செய்யாத மாணவனை அடித்துக்கொன்ற ஆசிரியர் கைது..
ஆசிரியர் அடித்தில் மாணவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சமீப காலங்களாக ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கக்கூடாது என்ற விதிகள் அதிகமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. அது முக்கியமானதும் கூட. ஆனால் அதை மீறியும் ஒரு சில இடங்களில் ஆசிரியர்கள் மாணவர்களை அடித்து வரும் செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்தவகையில் தற்போது ஆசிரியர் ஒருவர் வீட்டுப்பாடம் செய்யாத மாணவர் அடித்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் ஒரு தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு கணேஷ் என்ற 14 வயது மாணவர் படித்து வந்துள்ளார். அவர் வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று மனோஜ்(34) என்ற ஆசிரியர் அடித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர் அடித்ததில் மாணவர் மயங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் ஆசிரியர் மாணவரின் தந்தைக்கு தகவல் அளித்துள்ளார். அதில்,“வீட்டுப் பாடம் செய்யாததற்கு கண்டித்தவுடன் அவருடைய மகன் மயங்கி விழுவதை போல் நடிக்கிறார்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது.
மேலும் ஒரு சதுரங்கவேட்டை ஸ்டைல் மோசடி.. 6 பேர் கைது ; ஒரு கோடி ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல்..!
அதன்பின்பு பள்ளிக்கு விரைந்து வந்த மாணவரின் தந்தை அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அப்போது அந்த மாணவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவரின் தந்தை ஆசிரியர் மீது புகார் அளித்துள்ளார். அவரின் புகாரின் பெயரில் ஆசிரியர் மனோஜை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ராஜஸ்தான் மாநில கல்வி அமைச்சர் கோவிந்த் சிங் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், அந்தப் பள்ளியின் அங்கீகாரத்தையும் தற்போதைக்கு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடந்து முடிந்த பிறகு அப்பள்ளிக்கு மீண்டும் அங்கீகாரம் தருவதா வேண்டாமா என்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். பள்ளி மாணவரை வீட்டுப்பாடம் செய்யாததற்கு ஆசிரியர் அடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் பள்ளியின் மற்ற ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பள்ளி வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: 18 நிமிடங்கள் மகனுடன் சந்திப்பு; கையெடுத்து கும்பிட்ட நிமிடம்.. இறுக்கத்தில் ஷாருக்கான்