மேலும் அறிய

மேலும் ஒரு சதுரங்கவேட்டை ஸ்டைல் மோசடி.. 6 பேர் கைது ; ஒரு கோடி ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல்..!

வீட்டில் வைத்து பல கோடி ரூபாய் மதிப்பிலான இரிடியம் உள்ளதாக கூறி ஒரு கும்பல், கேரளாவை சேர்ந்த நபர்களிடம் சோதனை செய்து காட்டி வருவதாக செட்டிபாளையம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இருடியம் இருப்பதாக நூதன முறையில் மோசடி செய்த 8 பேர் கொண்ட கும்பலை கோவை மாவட்ட காவல் துறையினர் கைது செய்து, 99.20 லட்ச ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து  பல கோடி ரூபாய் மதிப்பிலான இரிடியம் உள்ளதாக கூறி ஒரு கும்பல், கேரளாவை சேர்ந்த நபர்களிடம் சோதனை செய்து காட்டி வருவதாக செட்டிபாளையம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. மேலும் கவச உடை, ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்டவை வைத்திருந்ததும் தெரியவந்தது.  இதையடுத்து வீட்டில் இருந்த  6 பேரிடமும் காவல் துறையினர் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது இரிடியம் மற்றும் ரைஸ் புல்லிங் விற்பனை மோசடிக்கு கூடியிருந்தது தெரியவந்தது.  

மேலும் ஒரு சதுரங்கவேட்டை ஸ்டைல் மோசடி.. 6 பேர் கைது ; ஒரு கோடி ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல்..!

முதல் கட்ட விசாரணையில் பிடிபட்டவர்கள் ராணிப்பேட்டையை சேர்ந்த தினேஷ்குமார், சூரியகுமார்,  திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த போஜராஜ்,  கோவையை சேர்ந்த முருகேசன் செந்தில்குமார்,  வெங்கடேஷ் பிரபு என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் கேரளாவை சேர்ந்த ரைஸ் புல்லிங் மோசடி கும்பலை சேர்ந்த சாஜி என்பவருடன் சேர்ந்து பணத் தேவை மற்றும் குடும்ப பிரச்சனைகள் காரணமாக ரைஸ் புல்லிங் தேவைப்படுவோரை இடைத்தரர்கள் மூலம் தேர்ந்தெடுத்து, இந்த மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. தற்போது கேரளாவை சேர்ந்த மகரூப், அப்துல் கலாம் ஆகிய இரண்டு பேரை அனுகி தங்களிடம் 2 ஆயிரம் கோடி மதிப்பிலான இரிடியம் ரைஸ் புல்லிங் இருப்பதாக கூறிய இந்த கும்பல், பல தவணைகளாக ரூ. 27 லட்சம்  வரை பணத்தை பெற்றுள்ளனர். ஆனால் அவர்களுக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்க இந்த கும்பல் சோதனை செய்து காட்டியும் பணம் பறித்து வந்துள்ளனர்.

மேலும் ஒரு சதுரங்கவேட்டை ஸ்டைல் மோசடி.. 6 பேர் கைது ; ஒரு கோடி ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல்..!

சாதாரண வெங்கல செம்பை பெட்டிக்குள் வைத்து, பெட்டிக்குள் மிளகாய் பிரேவை அடித்து வைத்துக் கொள்கின்றனர். பின்னர் வாங்க வருவோரிடம் கவச உடைகளை அணிந்து கொண்டு வெளியே எடுக்கும் போது, அந்த இரிடியத்திற்கு சக்தி உள்ளது போல காட்டி ஏமாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கும்பலை சேர்ந்த ரோஜா ராஜ். முருகேசன், தினேஷ், சூரியகுமார், செந்தில் குமார், வெங்கடேஷ் ஆகிய 6 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 99.20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள், இரண்டு கவச உடைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர் மற்றும் 2 கார்களை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த மோசடியில் ஈடுபட்டு தலைமறைவான கேரளாவை சேர்ந்த சாஜி என்பவரை இரண்டு தனிப் படை அமைத்து காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
Tamil Nadu Budget 2026 LIVE: திருமணம் செய்யும் பெண்களுக்கு ஒரு சவரன் தங்கம் வழங்கப்படும் - பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
திருமணம் செய்யும் பெண்களுக்கு ஒரு சவரன் தங்கம் வழங்கப்படும் - பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Vijay vs Udhayanidhi : கைதுக்கு பின் நேருக்கு நேர் சந்தித்த விஜய்- உதயநிதி.! சட்டப்பேரவையில் நடந்தது என்ன.?
கைதுக்கு பின் நேருக்கு நேர் சந்தித்த விஜய்- உதயநிதி.! சட்டப்பேரவையில் நடந்தது என்ன.?
Embed widget