மயிலாடுதுறை ரயில்நிலையத்தில் 1.6 கிலோ தங்கம் பறிமுதல் - சவுக்கார்பேட்டை வியாபாரியிடம் விசாரணை
’’ரயில்வே நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட 1.6 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் வணிக வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்’’
சென்னையில் இருந்து திருச்சி செல்லக்கூடிய சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் மயிலாடுதுறை ரயில்வே நிலையத்திற்கு வந்தபோது ரயில்வே பாதுகாப்பு துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ரயில்வே பாதுகாப்பு ஆய்வாளர் உதயச்சந்திரன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் வைத்திருந்த பையை சோதனையிட்டதில் அதில் 1,600 கிராம் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. இதற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில் நகைகளை பறிமுதல் செய்து ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
விசாரணையில் சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த நகை வியாபாரி ரமேஷ்குமார் என்பவருக்குச் சொந்தமான நகை என்பதும், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை பகுதியில் கொடுக்க வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் ரமேஷ்குமாரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் 300 கிராம் தங்க நகைக்கு மட்டுமே ஆவணம் உள்ளது. மேலும் 1,300 கிராம் ரூபாய் 60 லட்சம் மதிப்புள்ள தங்க நகை குறித்து திருச்சி வணிகவரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
இதையடுத்து மாநில வரி அலுவலர் ராஜசேகர் தலைமையிலான வணிக வரித்துறையினர் நேரில் வந்து ராமேஷிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதனை தொடர்ந்து வணிக வரித்துறையினர் தங்க நகைகளுக்கான அபராதம் மற்றும் தன்டனம் விதிக்கப்பட்டு 3 லட்சத்து 66 ஆயிரம் பணம் வசூலிக்கப்பட்டு தங்க நகைகளை நகை வியாபாரி ரமேஷிடம் ஒப்படைத்தனர்.
ஜிஎஸ்டி வரி நாடு முழுவதும் அமலில் இருந்தாலும் வரி ஏய்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகளில் இன்னும் பலர் ஈடுபட்டு வருவதாகவும், பல்வேறு நகைக்கடைகளில் ஜிஎஸ்டி வரி இல்லாமல் நகைகளை கொள்முதல் செய்து விற்பனை செய்யும் நடைமுறை தொடர்வதாகவும், இதனை தடுக்க பல்வேறு இடங்களில் தகவல்களை திரட்டி திடீர் சோதனைகளை நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கணக்கில் வராத தங்க நகைகளை விமானங்களில் எடுத்துச்செல்ல முடியாது என்பதால் ரயில் மற்றும் சாலை மார்க்க எடுத்துச் செல்வதையே பலரும் வழக்கமாக கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் படுத்தப்படுக்கையான நபர்’ - அரசு உதவி செய்ய கோரிக்கை