தனியாக இருக்கும் காதலர்கள் தான் டார்கெட்... பீச்சில் டம்மி போலீஸ் செய்த காரியம்
போலீஸ் எனக் கூறிக் கொண்டு பார்க், கடற்கரை பகுதியில், தனியாக இருக்கும் காதலர்களை மிரட்டி பணம், நகைகளை பறித்து வந்தது தெரிய வந்தது.

போலீஸ் என காதலர்களை மிரட்டி பணம் பறித்த விருத்தாசலம் நபர் கைது
புதுச்சேரி காலாப்பட்டில் பைக் திருட்டு அதிகரித்து வந்தது. அதனையொட்டி, முக்கிய பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி., பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கிடைத்த தகவலின் பேரில், காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை போலீசார், மர்ம நபரை தேடிவந்தனர்.
அதன்பேரில், தனியார் மருத்துவமனை அருகே, பைக் திருடிய நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில், அவர் விருத்தாசலம் அடுத்த சின்னகாப்பாங்குளத்தை சேர்ந்த சிவராமன் வயது 43 என்பதும், இவர் போலீஸ் எனக் கூறிக் கொண்டு பார்க், கடற்கரை பகுதியில், தனியாக இருக்கும் காதலர்களை மிரட்டி பணம், நகைகளை பறித்து வந்தது தெரிய வந்தது. அவ்வாறு கடந்த 2021ம் ஆண்டு, கிருமாம்பாக்கம் கடற்கரையில், காதலர்களிடம் இருந்து 5 சவரன் நகை பறித்துள்ளார்.
தமிழகத்தில், 30க்கும் மேற்பட்ட இருசக்கர வாகங்களை திருடியது தெரிய வந்தது. பைக் திருடும் போது, காரில் வந்து, அங்கு காரை நிறுத்தி விட்டு, பைக்கை திருடி சென்று, பின் காரை எடுத்து செல்வதும், தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவராமனை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவர் திருட பயன்படுத்திய கார், ஒரு பைக் மற்றும் மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.
வெளிநாட்டவரை மிரட்டிய இருவருக்கு போலீஸ் வலை
ஆரோவில் அருகே நாய்கள் பராமரிப்பு மையத்தில் நுழைந்து வெளிநாட்டவருக்கு மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் தேடிவருகின்றனர். ஆரோவில்லில் குதிரைப்பண்ணை அருகே தெரு நாய்கள் பராமரிப்பு மையம் உள்ளது. ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த ஹெய்ன்ஸ், 52; என்பவர் நாய்களை பராமரித்து வருகிறார்.
இதன் அருகில், புதுச்சேரி வி.வி.பி.,நகர் சுப்பையா வீதியை சேர்ந்த ஜெயச்சந்திரன், வயது 63 வீடு உள்ளது. சில மாதங்களுக்கு முன், பராமரிப்பு மையத்தில் இருந்து வெளியே வந்த நாயை ஜெயச்சந்திரன் தாக்கினார். இதனால், ஹெய்ன்ஸ் நேற்று முன்தினம், பாதுகாப்பு மையத்தை சுற்றி வேலி அமைத்தார். அப்போது அங்கு வந்த ஜெயச்சந்திரன் உள்ளிட்ட இருவர், ஹெய்ன்சை ஆபாசமாக திட்டி, மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து ஹெய்ன்ஸ், அளித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்கு பதிந்து, ஜெயச்சந்திரன் உள்ளிட்ட இருவரை தேடி வருகின்றனர்.

