Crime: 8 வகுப்பு மாணவருக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுத்த சக மாணவியின் தாய்.. சிகிச்சை பலனின்றி மாணவர் உயிரிழப்பு
சக மாணவியின் தாயார் கொடுத்த விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்த மாணவர் உயிரிழந்துள்ளார்.
காரைக்கால் பகுதியில் உடன் படிக்கும் மாணவியின் அம்மா குளிர்பானத்தில் விஷ மாத்திரை கலந்து கொடுத்ததால் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியின் காரைக்கால் நகரப் பகுதியில் ஹவுசிங் போர்டில் வசித்து வரும் தம்பதியினர் ராஜேந்திரன், மாலதி இவர்களுடைய மகன் காரைக்கால் நகரப் பகுதியான நேரு நகரில் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வழக்கம் போல் நேற்றும் பள்ளிக்கு சென்றுள்ளார். காலை 11:00மணி அளவில் ஒரு பெண்மணி பள்ளி வாசலில் உள்ள கேட்டிருக்கு வந்துள்ளார். அப்பொழுது பாதுகாப்பு பணியில் இருந்த வாட்ச்மேன் என்ன வேண்டும் என்று கேட்டுள்ளார்.அதற்கு அந்த பெண்மணி எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் இடம் இந்த குளிர்பானத்தை கொடுக்குமாறு கூறியதாக வாட்ச்மேன் தெரிவித்தார்.
அவர் உடனடியாக வகுப்பறையில் இருந்த மாணவர் அதனை கொடுத்துள்ளார். சிற்றுண்டி இடைவேளையில் அந்த குளிர்பானத்தை அந்த மாணவர் குடித்துள்ளான். நேற்று பள்ளி ஆண்டு விழா என்பதால் மதியும் அனைத்து மாணவர்களும் விடுமுறை அளிக்கப்பட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது இந்த மாணவர் வீட்டுக்கு செல்லும்போது வீட்டில் வாந்தி எடுத்துள்ளான் அதனைப் பார்த்த பெற்றோர்கள் உடனடியாக காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் சென்றுள்ளனர் அங்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் படிக்க:பிளாஸ்டிக் பையில் கிடந்த தொழிலதிபரின் உடல்... சென்னையில் பயங்கரம்... 6 தனிப்படைகள் தீவிர விசாரணை
அதன் பிறகு பெற்றோர் மற்றும் உறவினர்கள் குளிர்பானத்தை யார் கொடுத்தது என்று விசாரித்து வந்தனர் அந்த நிலையில் பள்ளிக்கு சென்று இதை யார் கொடுத்தது என்று விசாரணை செய்துள்ளனர். அப்போது கேட்டில் இருந்த வாட்ச்மேன் ஒரு பெண்மணி வந்து கொடுத்தார் என்பது ஒப்புக் கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சி மூலம் அதனை உறுதிப்படுத்தியதை அடுத்து காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
விசாரணையில் எட்டாம் வகுப்பில் படிக்கும் மாணவியின் அம்மா குளிர்பானத்தை கொடுத்தது தெரிய வந்தது அவரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.அவர் முன்னுக்கு முரணான தகவலை தெரிவித்ததாகவும் குளிர்பானத்தை நான் கொடுக்கவில்லை என்றும் பிஸ்கட் மட்டுமே நான் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் சிசிடிவி காட்சியில் அவர் கொடுத்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் விசாரணை செய்ததில் அந்த மாணவர் நன்றாக படிப்பதாகவும் தற்போது நடைபெற்ற பரீட்சையில் அவர் முதல் மதிப்பெண் பெற்றதாக தெரிய வருகிறது அதனைப் பொறுத்துக் கொள்ளாமல் மாணவியின் அம்மா அடிக்கடி தகராறு செய்வது வழக்கமாக கொண்டுள்ளதாகவும் அது போல் இதுவும் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடலூர் சம்பவம்:
கடலூரில் நடைபெற்ற பள்ளி சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவியை கர்ப்பம் ஆகியதும் மாணவி கழிவறையிலேயே குழந்தை பெற்றெடுத்து புதரில் வீசி சென்று சம்பவம் புவனகிரியில் பொரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க:14 வயது பழங்குடியின சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. பதைபதைக்கும் நிலையில் மீட்கப்பட்ட உடல்..