மேலும் அறிய
Advertisement
25 கோடி மதிப்பு.. மரகத லிங்கங்கள்.. 500 ஆண்டுகள் பழமை..! போலீஸாரிடமே விற்க முயன்ற இருவர் கைது..!
சென்னையில் இருந்து, வெளிநாடுகளுக்கு கடத்த இருந்த, 25 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு மரகத லிங்கங்களை போலீசார் மீட்டு, இருவரை கைது செய்துள்ளனர்.
சென்னை பூந்தமல்லி அருகே தொன்மையான உலோக நாகாபரணத்துடன் கூடிய பச்சைக்கல் லிங்கம் பதுக்கி வைக்கப்பட்டு, கடத்தப்படவுள்ளதாக சிலைத் திருட்டுத் தடுப்பு காவல் பிரிவுக்குத் தகவல் வந்தது. , சிலைத் திருட்டுத் தடுப்பு காவல் பிரிவின் காவல் இயக்குநா் ஜெயந்த் முரளி உத்தரவின்பேரில், காவல் தலைவா் தினகரன் வழிகாட்டுதலின்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராஜாராம் தலைமையில் துணைக் கண்காணிப்பாளா் கதிரவன், உதவி ஆய்வாளா்கள் ராஜசேகரன், செல்வராஜ் உள்ளிட்டோா் சிலைகளை வாங்கும் வியாபாரிகள் போல நடித்து, சிலை கடத்தல்காரா்கள் இருவரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, இச்சிலையின் விலை ரூ. 25 கோடி என கடத்தல்காரா்கள் கூறினா். சிலைத் திருட்டுத் தடுப்பு காவல் பிரிவினரின் பேச்சை நம்பிய கடத்தல்காரா்கள் சிலையைக் காண்பித்தனா். இதைத் தொடா்ந்து, சென்னை வெள்ளவேடு புது காலனியைச் சோந்த எத்திராஜ் மகன் பக்தவத்சலம் என்கிற பாலா (46), சென்னை புதுசத்திரம் கூடப்பாக்கம் கலெக்டா் நகரைச் சோந்த சுப்பிரமணியன் மகன் பாக்கியராஜ் (42) ஆகியோரை சிலைத் திருட்டுத் தடுப்பு காவல் பிரிவினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
இதையடுத்து, இருவரும் கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட உலோக நாகாபரணத்துடன் கூடிய பச்சைக்கல் லிங்கமும் ஒப்படைக்கப்பட்டது. இந்தப் பச்சைக்கல் லிங்கத்தை உலோகத்தாலான நாகாபரணம் தாங்கியுள்ளது. அதன் பின்புறம் பறக்கும் நிலையில் கருடாழ்வாா் உருவம் உள்ளது. இதன் உயரம் சுமாா் 29 செ.மீ., அகலம் 18 செ.மீ., பீடத்தின் அடிபாக சுற்றளவு சுமாா் 28 செ.மீ., எடை 9.8 கிலோ. பச்சைக்கல் லிங்கத்தின் உயரம் மட்டும் சுமாா் 7 செ.மீ. அதன் சுற்றளவு 18 செ.மீ. ஆக உள்ளது. இந்தச் சிலை ஏறத்தாழ 500 ஆண்டுகள் தொன்மையானது.
லிங்கத்தின் கீழே சிவபெருமானின் ஐந்து முகங்கள் ஆயுதங்களுடன் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் படம் எடுத்த நாகத்தின் பின்புறம் கருடாழ்வாா் கைகளைத் தூக்கிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அம்சங்கள் அனைத்தும் நேபாள பாணியில் உள்ளதாகக் கூறப்படுகிறது என சிலைத் திருட்டுத் தடுப்பு காவல் பிரிவினா் தெரிவித்தனா்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion