பெரம்பலூர் : பள்ளி மாணவனை மணந்த ஆசிரியை.. தற்கொலை திட்டம்.. பாய்ந்தது போக்சோ..
பெரம்பலூர் அருகே பள்ளி மாணவனை காதல் திருமணம் செய்த தனியார் பள்ளி ஆசிரியையை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பெரம்பலூர் அருகே பள்ளி மாணவனை காதல் திருமணம் செய்த தனியார் பள்ளி ஆசிரியையை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு 17 வயது. அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். அந்த பள்ளியில் அரியலூர் மாவட்டம், அம்பாபூரைச் சேர்ந்த ராசாத்தி என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இதனிடையே ஆசிரியை ராசாத்திக்கு திடீரென அந்த மாணவன் மீது காதல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாணவனிடம் ஆசிரியை ஜாடை காட்ட மாணவனும் சற்று குஷி ஆகியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து இருவரும் காதலிப்பதாக தங்கள் பெற்றோரிடம் திருமணத்திற்கு அனுமதி கேட்டுள்ளனர். மாணவனுக்கு வயது குறைவு என்பதால் இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் சுதாரித்துக்கொண்ட ஆசிரியை தன் காதலை கட்டுப்படுத்தமுடியாமல் கடந்த அக்டோபர் மாதம் 22-ஆம் தேதி மாணவனை இழுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் .
பின்னர், ராசாத்தி மூங்கில்பாடி கிராமத்திற்கு சென்று தனது உறவினர் வீட்டில் வைத்து மாணவனை திருமணம் செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஜோடிகளின் பெற்றோர் அந்த கிராமத்திற்கு சென்று சண்டையிட்டுள்ளனர். இருதரப்பும் அவர்களின் திருமணத்தை ஏற்கவில்லை.
இதனால் தங்களைப் பிரித்து விடுவார்கள் என்று பயந்துபோன காதல் ஜோடி ‘வாழ்வில்தான் ஒன்று சேர முடியவில்லை. சாவிலாவது ஒன்று சேர்வோம்’ என்று கருதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். ஆனால் உறவினர்கள் அதற்கும் எண்டு கார்டு போட்டுள்ளனர். இருவரையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தொடர்ந்து மாணவனும் ராசாத்தியும் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருவரும் பூரண குணமடைந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீடு திரும்பியுள்ளனர்.
இதையடுத்து, ஆசிரியை ராசாத்தி மீது ஆள் கடத்தல், குழந்தை திருமணம், தற்கொலைக்கு தூண்டியது, போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும், பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ராசாத்தியை ஆஜர்படுத்தி திருச்சி பெண்கள் மத்திய சிறையில் அவரை போலீசார் அடைத்தனர்.
காதல் என்னும் பெயரில் சிறுவன் ஒருவருக்கு தீங்கிழைத்த ஆசிரியை இப்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்