Pastor John Jebaraj: மாட்டிக்கினாரு ஒருத்தரு.. போக்சோ வழக்கில் சிக்கிய பிரபல மத போதகர் ஜான் ஜெபராஜ்
Pastor John Jebaraj: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பிரபல மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Pastor John Jebaraj: கிறிஸ்தவ மத போதனைகளை மக்கள் மத்தியில் பரப்புவதில் இளைஞர்களை கவரும் வகையில் புது யுத்திகளையும், நகைச்சுவையாகவும் பேசி மதபோதனைகளை பரப்பி வந்தவர் மத போதகர் ஜான் ஜெபராஜ். சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம், யூ டியூப்களில் இவரது மத போதனை வீடியோக்கள் மிகவும் பிரபலம். இந்த நிலையில் இவர் மீது போக்சோ வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
போக்சோ வழக்கில் பிரபல மத போதகர்:
கோயம்புத்தூரில் உள்ள கிராஸ் கட் சாலையில் உள்ள கிங் ஜெனரேஷன் பிரார்த்தனை கூடத்தை இவர் நடத்தி வருகிறார். கோயம்புத்தூரில் உள்ள ஜி.என்.மில்ஸ் பகுதியில் இவரது வீடு அமைந்துள்ளது. இந்த நிலையில், கடந்தாண்டு மே மாதம் 21் தேதி மத போதகர் ஜான் ஜெபராஜ் தனது வீட்டிற்கு இரண்டு சிறுமிகளை அழைத்து பாலியல் தொல்லை அளித்ததாக கூறி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரை சிறுமிகளின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் அளித்துள்ளனர். சிறுமிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தலைமறைவு:
சிறுமிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் மத போதகர் ஜான் ஜெபராஜை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும், அவர் தன் மீது வழக்குப்பதிவானதைத் தொடர்ந்து தலைமறைவாகியுள்ளார். இந்த நிலையில், மத போதகர் ஜான் ஜெபராஜை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
இவர் மத போதனை செய்யும் விதத்திற்கு கிறிஸ்தவ மதத்தின் மூத்த போதகர்கள், பாதிரியார்கள் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். திரைப்பட பாடல்களின் பாணியிலும், நகைச்சுவையாகவும் இவர் மத போதனை செய்வது பலரையும் கவரும் வண்ணம் இருந்தாலும் இவர் வேதம் கற்பிக்கும் முறை தவறு என்றும் பலரும் இவர் மீது விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.
வலைவீசி தேடும் போலீஸ்:
இந்த ஜான் ஜெபராஜ் செங்கோட்டையைச் சேர்ந்தவர். தென்கிழக்கு ஆசிய வேதகாம கல்லூரியில் இவர் படித்துள்ளார். மேலும், கிறிஸ்துவ மதத்தை தவறான வழியில் போதித்து ஜான் ஜெபராஜ் பணம் சம்பாதிப்பதாகவும் பலரும் இவர் மீதும் குற்றம் சாட்டி வருகின்றனர். பல விமர்சனங்களுக்கு ஆளாகி வந்த மத போதகர் ஜான் ஜெபராஜ் தற்போது பாலியல் வழக்கில் சிக்கியிருப்பது அவரது ஆதரவாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விரைவில் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் வேறு ஏதேனும் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

