இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி குறித்து கேள்வி கேட்ட யூடியூபர்: சுட்டுக் கொன்ற பாதுகாவலர்
இந்தியா பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி குறித்து கேள்வி எழுப்பி வீடியோ எடுத்த யூடியூபரை பாதுகாவலர் ஒருவர் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
IND vs PAK, T20 2024: பாகிஸ்தானைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர் பாதுகாவலரால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் போட்டி:
இந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியானது இருநாடுகளில் மட்டுமின்றி உலகம் முழுவதும் எதிர்பார்ப்புடன் பார்க்கப்படும் போட்டியாக இருக்கும். இரு நாடுகளுக்கிடையேயான அரசாங்கத்தின் உறவானது, எதிர்மறை போக்குடன் இருந்து வருவதால், இரு நாடுகளுக்கிடையேயான தொடர் போட்டியானது நடைபெறுவதில்லை. மேலும் இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு கிரிக்கெட் இல்லாத நிலையில், அவர்கள் ஐசிசி நிகழ்வுகளில் மட்டுமே ஒருவருக்கொருவர் போட்டியிடுகிறார்கள்.
இதனால் , இரு நாடுகளுக்கு இடையேயான போட்டியானது எதிர்பார்ப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் T20 உலகக் கோப்பை 2024 நடைபெற்று வருகிறது.
துப்பாக்கி சூடு:
கடந்த ஜூன் 9 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்த கிரிக்கெட் ஆட்டம் தொடர்பாக பேட்டி எடுத்த YouTuber க்கு ஆபத்தானதாக மாறியது.
யூடியூபரான சாத் அகமது என்பது பாகிஸ்தானில் உள்ள மொபைல் சந்தைக்குச் சென்று பல கடைக்காரர்களிடம், இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி தொடர்பான கேள்விகளைக் கேட்டார் என்று தகவல் தெரிவிக்கின்றன. அப்போது, யூடியூபர் சாத் அகமது, அங்கிருந்த ஒரு பாதுகாவலரை அணுகி, இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி குறித்து கேட்டுள்ளார். இந்த கேள்வியால், அந்த பாதுகாவலர் மிகுந்த எரிச்சலடைந்ததாக கூறப்படுகிறது. மேலும், விடாமல் தொடர்ந்து கேட்டுள்ளார்.
இதையடுத்து யூடியூபரை, அந்த பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கியால் சுட்டார். இதையடுத்து, அருகில் உள்ள மருத்துவமனைக்குச் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், போகும் வழியிலே உயிரிழந்தார் என்று தகவல் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாவலர் கருத்து தெரிவித்துள்ளதாக தகவல் பரவி வருகிறது, அவர் தெரிவித்ததாவது, தனது முகத்தின் அருகே கேமரா மற்றும் மைக்ரோஃபோன் மீண்டும் மீண்டும் கொண்டு வரப்பட்டதால் எரிச்சலடைந்தேன்.
Also Read: நண்பருடன் குடிக்க சென்ற பாதுகாப்பு படை வீரர்.! போதையில் நடந்த கொடூரம்: காஞ்சியில் அதிர்ச்சி
Also Read: விமான நிலையமா போதை கடத்தல் மையமா ? - சென்னையில் சிக்கிய ரூ.35 கோடி மதிப்புள்ள உயர்ரக போதை பொருள்