மேலும் அறிய

கடனை வசூலிக்க வீட்டு வாசலிலே உட்கார்ந்த ஊழியர்! தற்கொலை செய்து கொண்ட 2 குழந்தைகளின் தாய்!

மயிலாடுதுறை அருகே நுண்கடன் நிதி நிறுவனத்தில் பெற்ற கடனுக்கான தவணைத் தொகையை செலுத்த ஊழியர் வற்புறுத்தியதால், விரக்தி அடைந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களும் நுண்கடன் நிறுவனங்களும் தற்போது அதிக அளவில் செயல்பட்டு வருகிறது. இது ஒருபுறம் கிராம மற்றும் நகர்ப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை அதிகபடுத்தினாலும், ஒருபுறம் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத சூழலில் பல பெண்கள் பல இன்னலுக்கு ஆளாகி வருகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக பல குடும்ப பெண்கள் கடனை திரும்ப செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் சோக சம்பவங்களும் நடந்தேறி வருகிறது‌. கடனை திரும்ப பெறுவதற்கு சட்டதிட்ட விதிகள் பல நிர்ணயிக்கப்பட்டாலும், அதனை எந்த ஒரு நிதிநிறுவனங்களும் உரிய முறையில் பின்பற்றப்படுவதில்லை. அதற்கு ஓர் எடுத்துக்காட்டு சம்பவமாக மயிலாடுதுறையில் ஓர் நிகழ்வு நடந்தேறி உள்ளது.

UGC NET December Admit Card 2023: நெட் தேர்வு ஹால் டிக்கெட்டை வெளியிட்ட யுஜிசி; பதிவிறக்கம் செய்வது எப்படி?


கடனை வசூலிக்க வீட்டு வாசலிலே உட்கார்ந்த ஊழியர்! தற்கொலை செய்து கொண்ட 2 குழந்தைகளின் தாய்!

40 ஆயிரம் கடன்:

மயிலாடுதுறை அருகே நுண்கடன் நிதி நிறுவனத்தில் பெற்ற கடனுக்கான தவணைத் தொகையை செலுத்த ஊழியர் வற்புறுத்தியதால் விரக்தி அடைந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த காளி ஊராட்சி அபிராமி தோப்புத்தெருவை சேர்ந்தவர் 36 வயதான மாலதி. இவரது கணவர் 40 வயதான பாஸ்கர். இருவரும் தினக் கூலி வேலை செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மாலதி குத்தாலத்தில் உள்ள நுண்கடன் நிதி நிறுவனம் ஒன்றில் 40 ஆயிரம் ரூபாய் குழுக்கடன் பெற்றுள்ளார். தொடர்ந்து 9 தவணைகளை சரியாக செலுத்தி வந்துள்ளார். 

TN Rain Alert: அரபிக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. நீலகிரியில் கொட்டித் தீர்த்த மழை.. முழு விவரம் இதோ..


கடனை வசூலிக்க வீட்டு வாசலிலே உட்கார்ந்த ஊழியர்! தற்கொலை செய்து கொண்ட 2 குழந்தைகளின் தாய்!

தற்கொலை:

இந்த சூழலில் தொடர் மழையின் காரணமாக வேலை இல்லாததால் நுண்கடன் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய தவணை தொகையை கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தவணைத் தொகையை வசூலிக்க வந்த ஊழியர் சுகந்தன், பணத்தை பெறாமல் செல்ல மாட்டேன் என்று மாலதியின் வீட்டு வாசலிலேயே மாலை வரை காத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பணம் செலுத்த முடியாத விரக்தியில் மனமுடைந்த மாலதி, தனது வீட்டுக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, இதுகுறித்து மாலதியின் கணவர் பாஸ்கர் அளித்த புகாரின் பேரில் மணல்மேடு காவல் ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் காவல்துறை வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சுகந்தனை தேடி வருகின்றனர்.

Ma. Subramanian: 4000 கோடி ரூபாய் மழை நீர் வடிகால் பணி... யார் வந்தாலும் விவாதிக்க தயார்! அமைச்சர் மா. சுப்பிரமணியன் அதிரடி


கடனை வசூலிக்க வீட்டு வாசலிலே உட்கார்ந்த ஊழியர்! தற்கொலை செய்து கொண்ட 2 குழந்தைகளின் தாய்!

தொடர்ந்து உடற்கூராய்வுக்குப்பின் மாலதியின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும். 

TNPSC Group 2 Results Exclusive:குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? ட்ரெண்டாக்கும் தேர்வர்கள்- அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Trump on Iran War: “போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
“போரே வேணாம்டா சாமி, என்ன விட்டுடுங்க.!“ என்ன விலை கொடுத்தாவது ஈரானுடன் ஒப்பந்தம்; ட்ரம்ப் முனைப்பு
MG Hector Hawk: 530 கிமீ ரேஞ்ச்.! மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
530 கிமீ ரேஞ்ச்.! மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
Embed widget