TN Rain Alert: அரபிக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. நீலகிரியில் கொட்டித் தீர்த்த மழை.. முழு விவரம் இதோ..
இன்று தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும். இதன் காரணமாக இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அதேபோல் நாளை மற்றும் நாளை மறுதினம், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
12.12.2023 முதல் 14.12.2023 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
15.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி) 12, கோயம்புத்தூர் விமான நிலையம் (கோயம்புத்தூர்) 11, குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) தலா 10, மஞ்சளாறு (தேனி), பாளையம்கோட்டை (திருநெல்வேலி), தேவாலா (நீலகிரி) தலா 9, சூலூர் (கோயம்புத்தூர்), கோயம்புத்தூர்-தெற்கு (கோயம்புத்தூர்) தலா 8, திருமூர்த்தி அணை (திருப்பூர்), திருமூர்த்தி IB (திருப்பூர்), வாடிப்பட்டி (மதுரை) தலா 7, வைகை அணை (தேனி), ஆண்டிபட்டி (தேனி) தலா 6, ராஜபாளையம் (விருதுநகர்), ஆனைமலை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), போடிநாயக்கனூர் (தேனி), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), TNAU கோயம்புத்தூர் (கோயம்புத்தூர்) தலா 5, திருநெல்வேலி (திருநெல்வேலி), போதானூர் இரயில் நிலையம் (கோயம்புத்தூர்), ஆழியார் (கோயம்புத்தூர்), மதுக்கரை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), பெரியகுளம் (தேனி), கிணத்துக்கடவு (கோயம்புத்தூர்), பிளவக்கல் பெரியாறு அணை (விருதுநகர்), நிலக்கோட்டை (சென்னை), PWD வாரப்பட்டி (கோயம்புத்தூர்), சோத்துப்பாறை (தேனி) தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரபிக்கடல் பகுதிகள்:
09.12.2023 மற்றும் 10.12.2023: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.