UGC NET December Admit Card 2023: நெட் தேர்வு ஹால் டிக்கெட்டை வெளியிட்ட யுஜிசி; பதிவிறக்கம் செய்வது எப்படி?
யுஜிசி நெட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வுக்கான ஹால்டிக்கெட் தற்போது வெளியாகி உள்ளது. இதைப் பார்ப்பது எப்படி என்று காணலாம்.

யுஜிசி நெட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வுக்கான ஹால்டிக்கெட் தற்போது வெளியாகி உள்ளது. இதைப் பார்ப்பது எப்படி என்று காணலாம்.
2023ஆம் ஆண்டுக்கான டிசம்பர் மாத அமர்வின் யுஜிசி நெட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது. இதைப் பதிவிறக்கம் செய்வது எப்படி என்று காணலாம்.
இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிக்கான தகுதியையும், இளையர் இள நிலை ஆராய்ச்சியாளர் உதவித் தொகை (Junior Research Fellowship- JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வு தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. மொத்தம் 84 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை நடத்தப்படுகிறது.
இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிக்கான தகுதியையும், இளையர் இள நிலை ஆராய்ச்சியாளர் உதவித் தொகை (Junior Research Fellowship- JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வு தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது.
மொத்தம் 84 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை நடத்தப்படுகிறது. குறிப்பாக ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்தத் தேர்வு நடந்து வருகிறது.

2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கான தேர்வு, ஜூன் 13 முதல் 17ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில் டிசம்பர் மாத அமர்வுக்கான தேர்வு 11, 12, 13 மற்றும் 14ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
தேர்வுக்கான ஷிஃப்ட் விவரங்கள் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளன. இதற்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகி உள்ளது.
பதிவிறக்கம் செய்வது எப்படி?
* மாணவர்கள் https://ugcnet.nta.ac.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
* அதில், https://ugcnet.ntaonline.in/frontend/web/advancecityintimationslip/admit-card என்ற இணைப்பை க்ளிக் செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
* மேலே குறிப்பிட்டுள்ள இணைப்பில், விண்ணப்ப எண், பிறந்த தேதி, பாதுகாப்பு பின் ஆகியவற்றை உள்ளீடு செய்து, சப்மிட் பொத்தானைக் கொடுக்க வேண்டும்.
* இதன் மூலம் தேசிய தகுதித் தேர்வுக்கான அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வுக்கு என்னென்ன கட்டாயம்?
யுஜிசி நெட் தேர்வின்போது ஹால் டிக்கெட் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டியது கட்டாயம் என்று தேர்வுகளை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) தெரிவித்துள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு: www.nta.ac.in என்ற இணையதள முகவரியைக் காணலாம்.
தேர்வர்கள் 011 40759000 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தங்களின் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம். தேர்வர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி: ugcnet@nta.ac.in
Before You Go
Pregnant Woman Attack On Train | ரயிலில் கர்ப்பிணிக்கு கொடூரம்”அந்த சைக்கோவை விடாதீங்க” ஹேமராஜின் பகீர் பின்னணி!
ட்ரெண்டிங் செய்திகள்























