மேலும் அறிய
Advertisement
மது தராததால் ஏற்பட்ட பிரச்சனை.. காஞ்சி காமாட்சி கோவில் அருகே நடந்த கொடூரம்..
Kanchipuram : " மதுவுக்காககொலை செய்த சிறுவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வரும் சிவகாஞ்சி போலீசார்
மதுபானத்தில் பங்கு தராத பிச்சைக்கார முதியவரை காஞ்சிபுரத்தில் கழுத்து அறுத்து கொலை செய்த சிறுவன். மதுவுக்காக கொலை செய்த சிறுவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வரும் சிவகாஞ்சி போலீசார்.
தாத்தா பேரன் நட்பு
காஞ்சிபுரம் ( Kanchipuram News ) காஞ்சிபுரம் மாநகராட்சி பெரிய காஞ்சிபுரம் செங்கழுநீர் ஓடை மீதி பகுதியில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்த 60 வயது முதியவருடன் பூக்கடை சத்திரம் பகுதியைச் சேர்ந்த, 17 சிறுவன் ஒருவன் நட்பு ஏற்படுத்திக்கொண்டு இருவரும் மதுபானம் அருந்துவதை வழக்கமாக கொண்டு இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மதுபானம் அருந்த இருவரும் முடிவு செய்துள்ளனர்.
மதுவால் வந்த பிரச்சனை
இந்த நிலையில் பிச்சைக்கார முதியவர் மதுபானத்தில் சிறுவனுக்கு பங்கு வழங்காமல் குடித்துள்ளார். இதனால் கோபமடைந்த சிறுவன் கையில் வைத்திருந்த , கத்தியால் முதியவரின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டான். கொலை செய்யப்பட்டு கிடந்த முதியவரின் உடலை கண்டு வழியே சென்றவர்கள் சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பிச்சைக்கார முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவமானது காஞ்சிபுரத்தில் மிகப் பிரதான கோவிலாக இருக்கும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் அருகே நடைபெற்றது அதிர்ச்சி ஏற்படுத்தியது.
சிவகாஞ்சி போலீசார் விசாரணை
மேலும் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு பிச்சைக்கார முதியவரை கொலை செய்துவிட்டு மறைவிடத்தில் பதுங்கி இருந்த சிறுவனை கண்டுபிடித்து கைது செய்தனர். மேலும் சிறுவனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுபானத்தில் பங்கு வழங்காத பிச்சைக்கார முதியவரை, சிறுவன் பிளேடால் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் பகுதியில், பிச்சை எடுத்து வந்த முதியவர் கூடா நட்பு மற்றும் மது பழக்கத்தால் 17 வயது சிறுவனால் கொலை செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் :
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion