Madhya Pradesh: பெற்றோர்களை பார்க்க ஆசைப்பட்ட பிஞ்சுகுழந்தை...! 12 முறை கத்தியால் குத்திக்கொன்ற சைக்கோ கொலையாளி..! மத்திய பிரதேசத்தில் கொடூரம்
Madhya Pradesh: மத்திய பிரதேசத்தில் அம்மாவை பார்க்க ஆசைப்பட்ட குழந்தையை 12 முறை குத்தி கொலை செய்த கொலைகாரனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Madhya Pradesh: மத்திய பிரதேசத்தில் அம்மாவை பார்க்க ஆசைப்பட்ட 7 வயது குழந்தையை 12 முறை குத்தி கொலை செய்த சைக்கோ கொலைகாரனால் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.வின் ஆட்சி நடந்து வருகிறது. சிவ்ராஜ் சிங் சௌகான் முதல்வராக ஆட்சி செய்து வருகிறார். ஏழு கோடி மக்கள் தொகைக்கு மேல், மத்திய பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர். மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நபர் செய்துள்ள கொலையால் மத்திய பிரதேசமே பெரும் அதிர்ச்சியில் மூழ்கி உள்ளது.
சில வருடங்களுக்கு முன்னர் இந்தூர் மாவட்டத்தில் உள்ள தம்பதியினர் அடுத்தடுத்து எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளனர். இதனால், பெற்றோர்களை இழந்த 7 வயது குழந்தை, தனது பெற்றோர்களை பார்க்க வேண்டும் என அடிக்கடி அழுதுள்ளது. குழந்தையின் உறவினர்களும் குழந்தையினை எவ்வளவோ முயற்சி செய்து அவ்வப்போது குழந்தையினை சமாதானம் செய்து வந்துள்ளனர்.
இருப்பினும் 7 வயது குழந்தைக்கு தனது பெற்றோர்கள் இறந்தது தெரியாமல், மீண்டும் பெற்றோர்களை பார்க்க வேண்டும் எனவும் கூறி வந்துள்ளது. ஆனால், உறவினர்களும் அந்த ஊர்காரர்களும் பெற்றோர்கள் வெளியூர் சென்று விட்டனர் என்றெல்லாம் சொல்லி சமாதானம் செய்து வந்துள்ளனர். ஆனால் அவ்வப்போது தனது உறவினர்களும் ஊர்காரர்களும் சொல்லியதை கேட்டு சமாதானம் அடைந்த குழந்தை, மீண்டும் பெற்றோரை காண அடம் பிடித்துள்ளது. ஆனால், குழந்தையினை சமாதானம் செய்ய முடியாமல் எல்லோரும் விழி பிதுங்கியும், குழந்தையின் பரிதாப நிலையினையும் கண்டு மன வேதனையுடன் இருந்து வந்துள்ளனர். இப்படி இருந்த குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளது அந்த ஊரில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்தூர் மாவட்டத்தில் உள்ள அதே ஊரைச் சேர்ந்த, ஒரு நபரிடம் பெற்றோரை இழந்த குழந்தை தனது பெற்றோரை பார்க்க விரும்புவதாகவும், அவர்கள் சென்றுள்ள ஊருக்கு தன்னை அழைத்துச் செல்லும்படியும் கேட்டுள்ளது. இதனால், உன்னை உனது பெற்றோர்களிடம் அழைத்துச் செல்வதாக கூறி, குழந்தையை வீட்டுக்குள் அழைத்துச் சென்று 12 முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். குழந்தையின் உறவினர்கள் எவ்வளவோ முயன்றும் கதவை கொலைகாரன் திறக்காததால், குழந்தை உயிரிழந்துள்ளது. குழந்தையின் கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கொலைகாரனை கைது செய்தனர்.
விசாரணை முடிவில், குழந்தை தனது பெற்றோரை காண ஆசைப்பட்டதால் தான் அவரை கொலை செய்ததாக கூறியுள்ளதாக காவல் துறை கூறியுள்ளது. மேலும், குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முதற்கட்ட ஆய்வில், குழந்தை 12 முறை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த கொலையால் இந்தூர் மாவட்டமே பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
பெற்றோரை இழந்த 7 வயது குழந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த கொலைகாரனை அந்த ஊர் மக்கள் சைக்கோ எனவும் கூறி வருகின்றனர்.