Crime : அதிர்ந்த பயணிகள்.. பையில் சிறுமியின் சடலம்...நெடுஞ்சாலையில் பரபரப்பு...என்ன நடந்தது?
நெடுஞ்சாலை ஓரத்தில் பையில் அடைக்கப்பட்ட நிலையில் 15 வயது சிறுமியின் சடலம் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள வசாய் என்ற இடத்தில் நெடுஞ்சாலை ஓரத்தில் பையில் அடைக்கப்பட்ட நிலையில் 15 வயது சிறுமியின் சடலம் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. மும்பை - அகமதாபாத் நெடுஞ்சாலையின் ஓரத்தில் உள்ள நைகான் பாலம் அருகே பிற்பகல் 2 மணியளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Minor Girl’s Body Found Stuffed In Bag On Maharashtra Highway: Police https://t.co/NmxNiZ4QXZ
— ievrenofficial (@ievrenofficial) August 27, 2022
ஒரு வழிப்போக்கர் பையை அவதானித்து வலிவ் போலிஸாருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து காவல்துறை குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடலில் பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததால், பிரேத பரிசோதனைக்காக வசாய் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
"பாதிக்கப்பட்டவர் மும்பையின் அந்தேரி பகுதியில் வசித்து வந்தார். மேலும் அந்தேரி காவல் நிலையத்தில் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 (கொலை) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Minor Girl’s Body Found Stuffed In Bag On Maharashtra Highway: Police https://t.co/fu3G9f4Kut
— indian news box (@techmas77363916) August 27, 2022
இதுகுறித்து காவல்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "கொலையான சிறுமி பள்ளிக்குச் செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் கூறினர். அவர் ஆனால் அவர் மாலை வரை வீட்டிற்கு வராததால் அந்தேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இன்று பிற்பகல் சிறுமியின் சடலம் ஒரு பையில் கண்டெடுக்கப்பட்டது.
இந்த கொலை சம்பவம் குறித்து வாழைச்சேனை போலீசார் வழக்குப் பதிவு செய்து சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்" என்றார். நெடுஞ்சாலையில் பையில் அடைக்கப்பட்ட நிலையில், சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Minor Girl’s Body Found Stuffed In Bag On Maharashtra Highway: Police https://t.co/bQeykPIYds
— New4u (@New4u_newz) August 27, 2022