மேலும் அறிய

மேல்மலையனூர் அருகே சிறுமியை வன்புணர்வு செய்த கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

மேல்மலையனூர் அருகே சிறுமியை வன்புணர்வு செய்த கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் தாலுகா, மேல் புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த 7 வயதுடைய சிறுமி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்தார். மாணவி படித்து வரும் பள்ளியிலேயே மாலையில் சில இளைஞர்கள் டியூசன் எடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி இரவு 7 மணியளவில் சிறுமி, டியூசன் முடித்துக்கொண்டு தனது வீட்டிற்கு வந்தாள். அப்போது சிறுமியை பின் தொடர்ந்து வந்த மேல்புதுப்பட்டு வடக்கு தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளியான பொன்னுராமன் என்பவரின் மகன் பூபதி (24) சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவளை பாலியல் வன்புணர்வு செய்தார்.

மேல்மலையனூர் அருகே சிறுமியை வன்புணர்வு செய்த கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

மேலும் இதுபற்றி பெற்றோரிடம் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் சிறுமியை பூபதி மிரட்டினார். இதுகுறித்து சிறுமி, தனது பெற்றோரிடம் கூறினாள். பின்னர் அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் பூபதி மீது போக்சோ சட்டத்தின் கீழ் அவலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் இதுதொடர்பாக விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி முத்துக்குமரவேல், குற்றம் சாட்டப்பட்ட பூபதிக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 1.36 லட்சம் அபராதமும், இந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், அதோடு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக 9 லட்சம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட பூபதி, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலா ஆஜரானார்.

மேல்மலையனூர் அருகே சிறுமியை வன்புணர்வு செய்த கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ சட்டம் என்றால் என்ன?

போக்சோ சட்டத்தின்படி குழந்தைகளிடம் பாலியல் ரீதியான செய்கைகள் காட்டுவது, தொலைபேசி, அலைபேசியில் ஆபாசமாக பேசுவது, மின்னஞ்சல் அனுப்புவது, திட்டுவது, பாலியல் இச்சைக்கு அழைப்பது, பாலியல் உறவில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம். பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்ற கடந்த 2012ல் உருவான சட்டமே போக்சோ சட்டம் (Protection of Children from Sexual Offence). சட்டம் இருந்தாலும் கூட இச்சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கின்றன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal cyclone: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கொந்தளிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Fengal cyclone: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கொந்தளிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
TVK Vijay :
TVK Vijay : "விஜய் பங்கேற்கும் பொது நிகழ்ச்சியின் தேசி அறிவிப்பு” யாரோடு கைக்கோர்கிறார் தெரியுமா..?
Fengal Cyclone: பேய்மழை! விடாமல் வீசும் சூறைக்காற்று! திக்.. திக்.. கதியில் சென்னைவாசிகள்!
Fengal Cyclone: பேய்மழை! விடாமல் வீசும் சூறைக்காற்று! திக்.. திக்.. கதியில் சென்னைவாசிகள்!
கணவர்களுக்காக மனைவிகள் செய்த நேர்த்திக்கடன் - கரூர் ஸ்ரீ ஊரணி காளியம்மன் ஆலயத்தில் பெண்கள் நடத்திய திருவிளக்கு பூஜை
கணவர்களுக்காக மனைவிகள் செய்த நேர்த்திக்கடன் - கரூர் ஸ்ரீ ஊரணி காளியம்மன் ஆலயத்தில் பெண்கள் நடத்திய திருவிளக்கு பூஜை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஒரே குடும்பம், 3 கொலைகள்! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! வெளியான திடுக் தகவல்Kallakurichi School Issue : பாத்திரம் கழுவிய மாணவிகள்! அரசுப் பள்ளியில் அவலம்! பகீர் வீடியோBus Accident : எமன் ஆன U TURN..! நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் பதறவைக்கும் CCTV காட்சிகள்Keerthi Suresh Marriage : ’’இன்னும் ஒரு மாசம் தான்..கோவா-ல கல்யாணம் !’’வெட்கப்பட்ட கீர்த்தி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal cyclone: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கொந்தளிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Fengal cyclone: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கொந்தளிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
TVK Vijay :
TVK Vijay : "விஜய் பங்கேற்கும் பொது நிகழ்ச்சியின் தேசி அறிவிப்பு” யாரோடு கைக்கோர்கிறார் தெரியுமா..?
Fengal Cyclone: பேய்மழை! விடாமல் வீசும் சூறைக்காற்று! திக்.. திக்.. கதியில் சென்னைவாசிகள்!
Fengal Cyclone: பேய்மழை! விடாமல் வீசும் சூறைக்காற்று! திக்.. திக்.. கதியில் சென்னைவாசிகள்!
கணவர்களுக்காக மனைவிகள் செய்த நேர்த்திக்கடன் - கரூர் ஸ்ரீ ஊரணி காளியம்மன் ஆலயத்தில் பெண்கள் நடத்திய திருவிளக்கு பூஜை
கணவர்களுக்காக மனைவிகள் செய்த நேர்த்திக்கடன் - கரூர் ஸ்ரீ ஊரணி காளியம்மன் ஆலயத்தில் பெண்கள் நடத்திய திருவிளக்கு பூஜை
Fengal Cyclone: இருளில் மூழ்கியது செங்கல்பட்டு.. புயலால் தடையான மின்சாரம்.. . மீண்டும் வருவது எப்போது?
இருளில் மூழ்கியது செங்கல்பட்டு.. புயலால் தடையான மின்சாரம்.. . மீண்டும் வருவது எப்போது?
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயல்! சென்னையில் சூறைக்காற்றுடன் பெய்யும் கனமழை!
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயல்! சென்னையில் சூறைக்காற்றுடன் பெய்யும் கனமழை!
"புயல் எதிரொலி” தியேட்டர்கள் இயங்காது என அறிவிப்பு..!
கள்ளக்காதல் விவகாரம்; வாலிபரை கொன்று சாலையில் தூக்கி வீசிய சம்பவம்
கள்ளக்காதல் விவகாரம்; வாலிபரை கொன்று சாலையில் தூக்கி வீசிய சம்பவம்
Embed widget