100 கொடுத்தா 200... ஆசை காட்டி ரூ.12½ லட்சம் அபேஸ் செய்த அரசு ஊழியர் கைது!
பணமாகவும், நகையாகவும் எதுவாக இருந்தாலும் அது இரட்டிப்பாக கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
விழுப்புரம் : மேல்மலையனூர் அருகே 2 பேரிடம் ரூ.12½ லட்சம் நகை , பணத்தை மோசடி செய்த அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா மேல்வைலாமூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் மனைவி புஷ்பவள்ளி (வயது 36). இவரிடம் எதப்பட்டு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (36) என்பவர் தனது மனைவி மணிமேகலையுடன் (27) சென்று அறிமுகம் ஆகியுள்ளார். தான் மேல்மலையனூர் தாலுகா அலுவலகத்தில் டிரைவராக வேலை செய்து வருவதாகவும், எங்களிடம் ரூ.1 லட்சம் கொடுத்தால் ஒரு வருடம் கழித்து ரூ.2 லட்சம் தருவதாக கூறியுள்ளனர்.
இதை நம்பிய புஷ்பவள்ளி, தனது மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தில் கடந்த 20.1.2020 அன்று ரூ.4 லட்சமும், 5.2.2020 அன்று ரூ.4 லட்சமும், 7.5.2020 அன்று ரூ.4 லட்சமும் ஆக மொத்தம் ரூ.12 லட்சத்தை அவர்கள் இருவரிடமும் கொடுத்துள்ளார். இதேபோல் புஷ்பவள்ளிக்கு தெரிந்த அடுக்குபாசி கிராமத்தை சேர்ந்த அன்பழகன் என்பவரிடம் ரூ.30 ஆயிரம் மற்றும் ½ பவுன் தங்க மோதிரத்தை வெங்கடேசன், மணிமேகலை ஆகிய இருவரும் பெற்றுக்கொண்டு அதற்கு இரு மடங்காக தருவதாக கூறிச்சென்றனர்.
ஆனால் அவர்கள் இருவரும் புஷ்பவள்ளி, அன்பழகனிடம் வாங்கிய பணம், நகைக்கு இருமடங்காக கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்து விட்டனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட புஷ்பவள்ளி, அன்பழகன் ஆகியோர் தனித்தனியாக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசன், மணிமேகலை ஆகிய இருவரையும் வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மேல்மலையனூர் பகுதியில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற வெங்கடேசனை குற்றப்பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குமார், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை செஞ்சி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இச்சம்பவத்தில் தலைமறைவாக இருக்கும் மணிமேகலையை தேடி வருகின்றனர். கைதான வெங்கடேசன் முண்டியம்பாக்கம் கரும்பு சர்க்கரை ஆலையில் கலால் பிரிவில் அரசு வாகன ஓட்டுனராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்