மேலும் அறிய

சீர்காழி அருகே பயங்கரம்: நுங்கு விற்பனையில் ஏற்பட்ட தகராறில் உறவினரை வெட்டிக்கொன்ற இளைஞர்..!

சீர்காழி அருகே நுங்கு விற்பனை செய்த பணத்தைப் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், வாலிபர் நள்ளிரவில் வெட்டிக்கொலை செய்த உறவினரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே, பனை நுங்கு விற்பனை செய்த பணத்தைப் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், வாலிபர் ஒருவரை அவரது உறவினரே நள்ளிரவில் வீடு புகுந்து வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா காரைமேடு மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மருதுபாண்டியன் (வயது 23). அதே பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 30). இவர்கள் இருவரும் நெருங்கிய உறவினர்கள் ஆவர். தற்போது கோடை காலம் என்பதால், இருவரும் இணைந்து பனை மரங்களில் இருந்து நுங்கு வெட்டி எடுத்து வந்து, சூரக்காடு பகுதியில் சாலையோரம் கடை அமைத்து நுங்கு விற்பனை செய்து வந்தனர்.

உறவினர்கள் என்பதால் இருவரும் ஒருமித்த கருத்துடன் தொழில் செய்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக விற்பனை செய்த பணத்தை வைப்பதிலும், கணக்கு பார்ப்பதிலும் இவர்களுக்குள் மனக்கசப்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, கடந்த மூன்று நாட்களாக நடந்த விற்பனைக்கான தொகையை மருதுபாண்டியன் தன்னிடம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக கார்த்திக் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

நள்ளிரவு நடந்த கோர சம்பவம்

இந்நிலையில், நேற்று இரவு கார்த்திக் வழக்கம் போல மருதுபாண்டியன் வீட்டிற்குச் சென்றுள்ளார். இரவு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த பிறகு, மருதுபாண்டியன் மற்றும் அவரது மனைவி முத்துலட்சுமி ஆகிய இருவரும் வீட்டிற்குள் உறங்கச் சென்றுள்ளனர். கார்த்திக் வீட்டின் வெளித் திண்ணையில் படுத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

அனைவரும் உறங்கிய பிறகு, நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில், தான் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதத்துடன் கார்த்திக் ஆவேசமாக எழுந்துள்ளார். வீட்டின் தகரக் கதவை பலவந்தமாகத் திறந்து உள்ளே சென்ற கார்த்திக், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மருதுபாண்டியனிடம், "மூன்று நாட்களாகப் பனங்காய் விற்ற பணத்தை ஏன் என்னிடம் கொடுக்கவில்லை?" என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மருதுபாண்டியன் சுதாரிப்பதற்குள், கார்த்திக் தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் மருதுபாண்டியனின் முகம், தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த வெட்டுக்காயமடைந்த மருதுபாண்டியன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். கணவனின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த முத்துலட்சுமி, ரத்தக் கறையுடன் நின்றிருந்த கார்த்திக்கைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து கூச்சலிட்டார்.

போலீஸ் விசாரணை மற்றும் கைது

முத்துலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் கார்த்திக் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இது குறித்து உடனடியாக சீர்காழி போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த மருதுபாண்டியனின் உடலைக் கைப்பற்றிய போலீசார், உடற்கூறாய்வுக்காகச் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக் குற்றவாளியைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

அப்போது, அதே பகுதியில் மது போதையில் சுற்றித் திரிந்த கார்த்திக்கைப் போலீசார் மடக்கிப் பிடித்தனர். ஆரம்பக் கட்ட விசாரணையில், நுங்கு விற்பனை செய்த பணத்தை மருதுபாண்டியன் தராமல் ஏமாற்றியதால், ஆத்திரத்தில் அவரைக் கொலை செய்ததாகக் கார்த்திக் வாக்குமூலம் அளித்ததாகத் தெரிகிறது.

கிராமத்தில் நிலவும் பதற்றம்

நெருங்கிய உறவினர்களாக இருந்து, ஒன்றாகத் தொழில் செய்து வந்த இருவருக்குள் பணத்திற்காக நள்ளிரவில் கொலை நடந்த சம்பவம் காரைமேடு கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்த மருதுபாண்டியனுக்குத் திருமணமாகி முத்துலட்சுமி என்ற மனைவி உள்ளார். ஒரு சிறிய பணத்தகராறு, ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரத்தையே சிதைத்துள்ளதாக அந்தப் பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட கார்த்திக் மீது கொலை வழக்கு (IPC 302) பதிவு செய்துள்ள சீர்காழி போலீசார், அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் இந்தக் கொலை நடந்ததா அல்லது திட்டமிட்டு நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இச்சம்பவம் காரணமாகச் சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணின் தாலிச் செயினை பறிக்க முயற்சி: பெயிண்டரை தட்டித்தூக்கிய போலீசார்
நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணின் தாலிச் செயினை பறிக்க முயற்சி: பெயிண்டரை தட்டித்தூக்கிய போலீசார்
ஓட ஓட வெட்டிக் கொல்லப்பட்ட திமுக பிரமுகர் கொலை குற்றவாளி.. பதற்றத்தில் திண்டுக்கல்... நடந்தது என்ன?
ஓட ஓட வெட்டிக் கொல்லப்பட்ட திமுக பிரமுகர் கொலை குற்றவாளி.. பதற்றத்தில் திண்டுக்கல்... நடந்தது என்ன?
விசிக பிரமுகர் கொலை வழக்கு! இன்ஸ்டாவில் ஸ்டேட்டஸ் வைத்ததால் சிக்கிய 9 பேர்! பகீர் பின்னணி!
விசிக பிரமுகர் கொலை வழக்கு! இன்ஸ்டாவில் ஸ்டேட்டஸ் வைத்ததால் சிக்கிய 9 பேர்! பகீர் பின்னணி!
மக்களே உஷார்.. டேட்டிங் செயலி மூலம் முதலீட்டு மோசடி... ரூ.8 கோடி பணத்தை இழந்த 3 பேர்!
மக்களே உஷார்.. டேட்டிங் செயலி மூலம் முதலீட்டு மோசடி... ரூ.8 கோடி பணத்தை இழந்த 3 பேர்!

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
Tata Aeris CNG Review: இருக்கு, ஆனா இல்ல.! பல சிறப்புகள் இருந்தாலும் சம்திங் மிஸ்ஸிங்.! புதிய டாடா ஏரிஸ் CNG ரிவ்யூவ்
இருக்கு, ஆனா இல்ல.! பல சிறப்புகள் இருந்தாலும் சம்திங் மிஸ்ஸிங்.! புதிய டாடா ஏரிஸ் CNG ரிவ்யூவ்
Embed widget