மேலும் அறிய

பட்டப்பகலில் சகோதரர்கள் 3 பேருக்கு அரிவாள் வெட்டு - சீர்காழியில் கொடூர சம்பவம்

சீர்காழியில் வெவ்வேறு இடங்களில் இருந்த சகோதரர்கள் மூன்று பேரை அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாள் வெட்டி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழியில் மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த மைய பகுதியில் சகோதரர்கள் மூன்று பேரை அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாள் வெட்டி சென்ற சம்பவம் பொதுமக்கள் இடையே பெரும் ஏற்படுத்தியுள்ளது.

வெட்டபட்ட சகோதரர்கள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அய்யனார் கோயில் தெருவை சேர்ந்தவர் 40 வயதான மதன். இவர் சீர்காழி சட்டநாதர் கோயில் அருகே தள்ளுவண்டியில் பஜ்ஜி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று சீர்காழி பிடாரி தெற்கு வீதி அருகே  உள்ள டீக்கடை அருகே மதன் நின்றுள்ளார். அப்போது அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மதனை அடித்து, ஆடைகளை கிழித்து எரிந்து அவரது கால், உடல் உள்ளிட்ட இடங்களில் அரிவாளால் கொடுரமாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த மதனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனை சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மதனை அனுப்பி வைத்தனர்.

பட்டப்பகலில் சகோதரர்கள் 3 பேருக்கு  அரிவாள் வெட்டு - சீர்காழியில் கொடூர சம்பவம்

மீன் பிடித்த நபருக்கு வெட்டு

இதேபோல் அதே பகுதியை சேர்ந்த மதனின் சகோதரர் முறை உறவான 33 வயதான மணிகண்டன் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் சீர்காழி உப்பனாற்று  இடது கரையோரம் மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர்.  அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத கும்பல் மணிகண்டன் கரையில் நிறுத்தி வைத்திருந்த அவருடைய இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்து கீழே தள்ளிவிட்டு, ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மணிகண்டன் மற்றும் சுரேஷை வெட்டிவிட்டு  தப்பிச் சென்றுள்ளனர்.

பட்டப்பகலில் சகோதரர்கள் 3 பேருக்கு  அரிவாள் வெட்டு - சீர்காழியில் கொடூர சம்பவம்

காவல்துறையினர் விசாரணை

காயம் அடைந்த மணிகண்டன் மற்றும் சுரேஷை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சீர்காழி காவல்துறையினர் விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். ஏதேனும் முன்விரோதம்  காரணமாக சகோதரர்கள் மூன்று பேர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டப்பட்டனரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் பட்ட பகலில் சீர்காழி காவல் நிலையம் மற்றும் சீர்காழி புதிய பேருந்து நிலையம், தாலுக்கா அலுவலகம் அருகில் அதிக மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் நடந்த இந்த சம்பவம் பொதுமக்கள் அச்சமடைய செய்துள்ளது.

பட்டப்பகலில் சகோதரர்கள் 3 பேருக்கு  அரிவாள் வெட்டு - சீர்காழியில் கொடூர சம்பவம்

மேலும் இது தொடர்பாக சிலர் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அய்யனார் கோயில் தெருவை சேர்ந்த மதனுக்கும், அதே தெருவை சேர்ந்த முதியவருக்கும் ஒருவர் தள்ளுவண்டி கடை போடுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது, இதில் ஆத்திரமடைந்த மதன் மற்றும் அவரது சகோதரர்கள் சேர்ந்து அந்த முதியவரை அடித்துள்ளனர். இது குறித்து சீர்காழி காவல் நிலையத்தில் முதியோர் புகார் அளித்துள்ளார்.

பட்டப்பகலில் சகோதரர்கள் 3 பேருக்கு  அரிவாள் வெட்டு - சீர்காழியில் கொடூர சம்பவம்

போலீசார் புகார் பெற்றுக்கொண்டு புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த முதியவரின் மகன் மற்றும் நண்பர்கள் ஒன்று சேர்ந்து மதன் மற்றும் அவரது சகோதரரை பட்டமகலில் காவல் நிலையம் அருகே நடுரோட்டில் சரமாரியாக கத்தியால் குத்தியும், இரும்பு பைப்பாலும் அடித்து விட்டு தப்பி சென்றுள்ளனர் என தெரிவித்துள்ளனர். மர்ம நபர்கள் முகத்தை மறைத்து மதன் என்பவரை பிரதான சாலை ஓரம் அடித்து போட்டு சட்டையை கிழித்து போடும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்" பொங்கலுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
Chennai Rain: சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Elephant Gandhimathi : யானை காந்திமதிக்கு என்னாச்சு? கதறி அழுத பாகன்! சோகத்தில் நெல்லை மக்கள்!V C Chandhirakumar Profile: செந்தில்பாலாஜி Choice! உடனே OK சொன்ன ஸ்டாலின்.. யார் இந்த சந்திரகுமார்?Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஸ்டாலின் வைத்த கோரிக்கை நிறைவேற்றிய ராகுல்!Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்" பொங்கலுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
Chennai Rain: சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
அதிமுக வழியில் அண்ணாமலை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கும் பாஜக!
அதிமுக வழியில் அண்ணாமலை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கும் பாஜக!
கவர்னர் என்ற திமிரா? ஆவேசமாக டயலாக் பேசிய துரைமுருகன்!
கவர்னர் என்ற திமிரா? ஆவேசமாக டயலாக் பேசிய துரைமுருகன்!
ரயில் முன்பதிவில் முறைகேடுகள்.. புகார் அளிப்பது இனி ரொம்ப ஈஸி!
ரயில் முன்பதிவில் முறைகேடுகள்.. புகார் அளிப்பது இனி ரொம்ப ஈஸி!
அயலக தமிழர்களுக்கு புதிய திட்டம் - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் 
அயலக தமிழர்களுக்கு புதிய திட்டம் - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் 
Embed widget