அதிக வாகனங்களை விற்பனை செய்ய டார்கெட் - அவசர கதியில் விற்பனை செய்த பைக்கால் வில்லங்கத்தில் சிக்கிய விற்பனை பிரதிநிதி
மயிலாடுதுறையில் ஆவணங்களை சரிபார்க்காமல் தவணை முறையில் விற்ற பைக்கை திரும்ப கேட்டு, பெண் ஒருவரை தாக்கிய இருசக்கர வாகன விற்பனை பிரதிநிதி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
மயிலாடுதுறையில் உரிய ஆவணங்களை சரிபார்க்காமல் முன்பணம் பெற்று தவணை முறையில் அவசர அவசரமாக விற்ற இருசக்கர வாகனத்தை திரும்ப கேட்டு பெண் வாடிக்கையாளரை தாக்கிய தனியார் இருசக்கர வாகன விற்பனை பிரிவு நிர்வாகி மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தவணை முறையில் புதிய பைக் வாங்கிய பெண்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அவையாம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரின் மனைவி 27 வயதான நிவேதா. இவர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த ஜூன் 11 -ஆம் தேதி மயிலாடுதுறை - பூம்புகார் சாலையில் உள்ள தாசரதி டிவிஎஸ் நிறுவனத்தில் தனது கணவர் குமார் பெயரில் இருசக்கர வாகனத்தை (ஸ்கூட்டி) தனியார் வங்கியில் 24 மாதம் தவணை முறையில் பணம் செலுத்தும் வகையில், ரூபாய் 6 ஆயிரத்து 900 முன்பணம் கட்டி வாகனத்தை வாங்கியுள்ளார்.
AI in IIT Madras: ஐஐடி சென்னையில் AI படிக்க ஆசையா? இந்த ஆண்டிலேயே சேரலாம்: எப்படி?- முழு விவரம்
ஆவணங்கள் சரிபார்ப்பில் குளறுபடி
இந்த சூழலில் ஏற்கனவே குமார் தவணை முறையில் இருசக்கர வாகனம் வாங்கி, முறையாக பணம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இந்த விபரம் தெரிய வந்ததால் புதிதாக வாங்கிய வாகனத்தை திருப்பி ஒப்படைக்கும்படி டிவிஎஸ் நிறுவனத்தின் விற்பனை பிரிவு நிர்வாகி முருகமங்கலத்தை சேர்ந்த சௌந்தர்ராஜன் கூறியுள்ளார். ஆனால் நிவேதா வாகனத்தை திரும்ப ஒப்படைக்கவில்லை என கூறப்படுகிறது.
WhatsApp New Features: இனி ஆடியோவுடன் ஸ்க்ரீன்ஷேரிங்; வாட்ஸ் அப் வழங்கியுள்ள புதிய அப்டேட்கள் இதோ!
தாக்கப்பட்ட பெண்
இந்நிலையில் மயிலாடுதுறையை அடுத்த ஆனதாண்டவபுரம் அருகே நிவேதா இருசக்கர வாகனத்தில் சென்றபோது டிவிஎஸ் நிறுவனத்தின் விற்பனை பிரிவு நிர்வாகி சௌந்தர்ராஜன் வழிமறித்து தாக்கி, நிவேதாவின் ஆடையை பிடித்து இழுத்தாகவும், அதில் உடை கிழிந்து கழுத்தில் அணிந்திருந்த தாலி செயின் அருந்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளான நிவேதா மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இச்சம்பவம் குறித்து நிவேதா மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வாகன பிரதிநிதி மீது வழக்கு பதிவு
புகாரை அடுத்து மயிலாடுதுறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அதிக வாகனங்களை விற்பனை செய்வதற்காக உரிய ஆவணங்களை சரியான முறையில் சரிபார்க்காமல் வாகனத்தை கொடுத்துவிட்டு, தற்போது தகறாரில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதனையடுத்து மயிலாடுதுறை காவல்துறையினர் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் சௌந்தர்ராஜன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.