மேலும் அறிய

மாயமான பள்ளி சிறுமி: காவல்துறை மெத்தனத்தால் பெற்றோர் தர்ணா! ஆட்சியரின் அதிரடி உத்தரவு

மயிலாடுதுறை அருகே காணாமல் போன பள்ளிச் சிறுமி கண்டுபிடிக்க காவல்துறையினர் அலட்சியம் காட்டுவதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் தர்ணா போராட்டத்தால் ஈடுப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை: பள்ளிக்குச் சென்ற தங்களது 15 வயது மகளைக் காணவில்லை என குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்து ஒரு வாரம் ஆகியும், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, சிறுமியின் பெற்றோர் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் எதிரொலியாக, உடனடியாகச் சிறுமியை மீட்கத் துரித நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சிறுமி மாயமானது எப்படி?

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தை அடுத்த திருமணஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரபாஸ்கர் - மகாலட்சுமி தம்பதியினரின் 15 வயது மகள், அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த நவம்பர் 3-ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற இவர், இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர், மறுநாள் நவம்பர் 4-ஆம் தேதி குத்தாலம் காவல் நிலையத்தில் தங்கள் மகளைக் காணவில்லை எனப் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், ஒரு வாரமாகியும் சிறுமி குறித்து எந்தத் தகவலும் கிடைக்காததால், பெற்றோர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

கடத்திச் சென்றவர் யார்?

இதற்கிடையில், மணல்மேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வக்காரமாரியைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் மகேஷ் தங்களது மகளை ஆசை வார்த்தைகள் கூறி கடத்திச் சென்றதாக பெற்றோருக்குத் நம்ப தகுந்த தகவல் கிடைத்துள்ளது. தங்கள் மகளைக் கடத்திச் சென்ற நபர் குறித்த இந்தத் தகவலை அவர்கள் உடனடியாகக் குத்தாலம் காவல் நிலையத்திற்கும், மயிலாடுதுறை டிஎஸ்பி அலுவலகத்திற்கும் நேரில் சென்று தெரிவித்தனர்.

ஆனால், கடத்தியவர் குறித்த தகவல் தெரிந்த பின்னரும், காவல் துறையினர் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்றும், சிறுமி குறித்து எந்தவொரு முன்னேற்றமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும் பெற்றோர் வேதனை தெரிவித்தனர்.

ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணா போராட்டம்

காவல்துறையின் அலட்சியம் மற்றும் ஒரு வாரமாக நீடித்த மௌனம் காரணமாக விரக்தியடைந்த பெற்றோர் சுந்தரபாஸ்கர் மற்றும் மகாலட்சுமி, இன்று (நவம்பர் 10) மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர். தங்கள் மகள் குறித்த தகவலை உடனடியாகத் தெரிவிக்கக் கோரி, கோரிக்கை விளக்கப் பதாகைகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த திடீர் போராட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. போராட்டம் குறித்துத் தகவலறிந்த ஆட்சியரக அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்துக்கு வந்து பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட சமரசத்திற்குப் பின்னர், அவர்களை மாவட்ட ஆட்சியரிடம் அழைத்துச் செல்வதாக உறுதியளித்தனர்.

மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை

ஆட்சியரக அதிகாரிகளின் சமரசத்தை ஏற்றுக்கொண்ட பெற்றோர், போராட்டத்தைக் கைவிட்டு, மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மாவட்ட ஆட்சியரிடம் தங்களது மகளைக் கடத்தியவர் குறித்த விவரங்களையும், காவல்துறையின் மெத்தனப் போக்கையும் விளக்கி ஒரு மனுவை அளித்தனர்.

பெற்றோரின் மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், அவர்கள் தெரிவித்த தகவல்களைக் கேட்டறிந்து, நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டார். உடனடியாக அவர் காவல் துறை உயரதிகாரிகளைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். சிறுமி மாயமான விவகாரத்தில் ஒரு வாரமாகியும் நடவடிக்கை எடுக்காதது குறித்துக் கேள்வி எழுப்பியதுடன், உடனடியாகச் சிறுமியை மீட்கவும், கடத்தலில் ஈடுபட்டவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

மாவட்ட ஆட்சியரின் இந்த உடனடி உத்தரவு, தங்களுக்குச் சிறுமியை மீட்கும் நம்பிக்கை அளிப்பதாகப் பெற்றோர் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியரின் தலையீட்டைத் தொடர்ந்து, காவல்துறையினர் இனி தீவிர நடவடிக்கையில் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

ஏற்கனவே தவளை... இப்போ புழுக்களா? மயிலாடுதுறை மக்களை அலறவிடும் தனியார் குடிநீர் கேன் - பின்னணி என்ன?
ஏற்கனவே தவளை... இப்போ புழுக்களா? மயிலாடுதுறை மக்களை அலறவிடும் தனியார் குடிநீர் கேன் - பின்னணி என்ன?
நூதன முறையில் முதிய தம்பதியை ஏமாற்றி 7 பவுன் நகை திருட்டு: தஞ்சாவூரில் அதிர்ச்சி சம்பவம்
நூதன முறையில் முதிய தம்பதியை ஏமாற்றி 7 பவுன் நகை திருட்டு: தஞ்சாவூரில் அதிர்ச்சி சம்பவம்
15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... தஞ்சாவூர் அருகே கார் டிரைவர் போக்சோவில் கைது
15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... தஞ்சாவூர் அருகே கார் டிரைவர் போக்சோவில் கைது
மின்வாரிய ஊழியருக்கு சரமாரி கத்திக்குத்து... மணப்பாறையை அதிரவைத்த சிசிடிவி காட்சிகள்!
மின்வாரிய ஊழியருக்கு சரமாரி கத்திக்குத்து... மணப்பாறையை அதிரவைத்த சிசிடிவி காட்சிகள்!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN MBBS Seats: திட்டமிட்டு கண்டுகொள்ளாமல் விட்ட DMK? பறிபோன 650 MBBS சீட்கள் - எகிறும் கட்டணம், 7.5% சிக்கல்?
திட்டமிட்டு கண்டுகொள்ளாமல் விட்ட DMK? பறிபோன 650 MBBS சீட்கள் - எகிறும் கட்டணம், 7.5% சிக்கல்?
TVK On Seeman: ”ஊழல் முதலாளிகளுக்கு ஆதரவா?” முதல்முறையாக சீமானை அட்டாக் செய்த தவெக அமைச்சர்
”ஊழல் முதலாளிகளுக்கு ஆதரவா?” முதல்முறையாக சீமானை அட்டாக் செய்த தவெக அமைச்சர்
Gold Silver Rate July 8th: நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.! இன்றும் குறைந்த தங்கம், வெள்ளி விலை; இப்போ எவ்ளோ.?
நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.! இன்றும் குறைந்த தங்கம், வெள்ளி விலை; இப்போ எவ்ளோ.?
Udhayanidhi:
"சட்டசபையில் தலைவர் ஸ்டாலினை Miss பண்றேன்" - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Manickam Tagore Vs Thiruma: “உள்ள வந்துட்டு வேற மாதிரி பேசுறது வெட்டி வேலை“ திருமாவை ‘லெப்ட் அண்ட் ரைட்‘ வாங்கிய மாணிக்கம் தாகூர்
“உள்ள வந்துட்டு வேற மாதிரி பேசுறது வெட்டி வேலை“ திருமாவை ‘லெப்ட் அண்ட் ரைட்‘ வாங்கிய மாணிக்கம் தாகூர்
US Strikes Iran: மத்திய கிழக்கில் மீண்டும் போர்.? ஹார்முஸ் விவகாரத்தால் கெட்ட கடுப்பில் ட்ரம்ப்; ஈரான் மீது குண்டு மழை
மத்திய கிழக்கில் மீண்டும் போர்.? ஹார்முஸ் விவகாரத்தால் கெட்ட கடுப்பில் ட்ரம்ப்; ஈரான் மீது குண்டு மழை
Mahindra Thar EV: அப்படி போடு.! EV அவதாரமெடுக்கும் SUV-க்களின் மகாராஜா.! தார் மின்சார பதிப்பை வெளியிடும் மஹிந்திரா
அப்படி போடு.! EV அவதாரமெடுக்கும் SUV-க்களின் மகாராஜா.! தார் மின்சார பதிப்பை வெளியிடும் மஹிந்திரா
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 9 (09.07.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை இருக்கு; உங்க ஏரியா இருக்கா பாருங்க.?
சென்னை மக்களே.! ஜூலை 9 (09.07.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை இருக்கு; உங்க ஏரியா இருக்கா பாருங்க.?
Embed widget