மேலும் அறிய

Crime: வீட்டுக்குள் புகுந்து பெண்ணை கடத்திய விவகாரம்: 19 பேர் மீது வழக்குப் பதிவு; 12 பேருக்கு போலீஸ் வலைவீச்சு..!

மயிலாடுதுறையில் வீட்டிற்குள் புகுந்து இளம்பெண்ணை  ஆயுதங்களுடன்  வந்து வலுக்கட்டாயமாக கடத்திச்சென்ற வழக்கில் 19 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை கஞ்சாசமேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன் மகன் விக்னேஸ்வரன் (34). இவர் மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயம் அருகில் உள்ள மயிலம்மன் நகரில் உள்ள தனது பாட்டி பிரேமா வீட்டில் தங்கியிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண் ஒருவரை காதலித்துள்ளார். அதன்பின்னர் விக்னேஸ்வரனின் நடவடிக்கை பிடிக்காமல் அவருடன் பழகுவதை அப்பெண் நிறுத்தியுள்ளார். 

Crime: வீட்டுக்குள் புகுந்து பெண்ணை கடத்திய விவகாரம்: 19 பேர் மீது வழக்குப் பதிவு; 12 பேருக்கு போலீஸ் வலைவீச்சு..!

ஆனால், அதன்பின்னரும் அந்த பெண்ணை விக்னேஸ்வரன் பின்தொடர்ந்ததோடு, அப்பெண்ணைக் திருமணம்செய்து தரக்கூறி பெண் வீட்டுக்குச் சென்று தகராறிலும் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து, அப்பெண் வீட்டார் மயிலாடுதுறை போலீஸில் 2 முறை புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக மயிலாடுதுறை போலீஸார் இருதரப்பினரையும் அழைத்து பேசி இனி அப்பெண்ணை தொந்தரவு செய்யக்கூடாது என விக்னேஸ்வரனிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் கடந்த ஜூலை 12-ஆம் தேதி அப்பெண்ணை கடத்த முயற்சித்துள்ளார். அப்போது அவரிடமிருந்து தப்பித்த இளம்பெண் இதுகுறித்தும் மயிலாடுதுறை போலீஸில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக, வீடுபுகுந்து பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்து, கொலை மிரட்டல் விடுத்ததாக மயிலாடுதுறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரனை தேடி வந்தனர். 

Crime: வீட்டுக்குள் புகுந்து பெண்ணை கடத்திய விவகாரம்: 19 பேர் மீது வழக்குப் பதிவு; 12 பேருக்கு போலீஸ் வலைவீச்சு..!

இந்நிலையில், கடந்த  செவ்வாய்க்கிழமை இரவு, ஒரு ஸ்கார்பியோ கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த விக்னேஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகள் சுமார் 19 நபர்கள் அப்பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து, வலுக்கட்டாயமாக கதறகதற தூக்கிச் சென்றுள்ளனர். இதுகுறித்து, தகவலறிந்த மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் தலைமையிலான போலீஸார் உடனடியாக நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தியதோடு, வீட்டில் இருந்த   சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி பெண்ணைக் கடத்திய நபர்களின் செல்போன் டவரை கண்காணித்ததில் விக்ரவாண்டி  பகுதியில் செல்வது தெரியவந்து அதனைதையடுத்து அங்கு உள்ள காவல்நிலையத்திற்கு  தகவல் அளித்ததின்  பேரில் உள்ளுர் போலீசார் விக்ரவாண்டி டோல்கேட்டில் அவர்களை மடக்கி பிடித்தனர்.

Crime: வீட்டுக்குள் புகுந்து பெண்ணை கடத்திய விவகாரம்: 19 பேர் மீது வழக்குப் பதிவு; 12 பேருக்கு போலீஸ் வலைவீச்சு..!

கடத்தப்பட்ட இளம் பெண்ணை 3 மணி நேரத்துக்குள்ளாக பாதுகாப்பாக மீட்ட போலீசார், வாகனத்தில்  பெண்ணைக் கடத்திய சென்ற விக்னேஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகள் மயிலாடுதுறை சேந்தங்குடியைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (35), விழுப்புரம் பில்லூர் காமன் தெருவைச் சேர்ந்த செல்வகுமார் ஆகிய 3 பேரை கைது செய்து மயிலாடுதுறை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இச்சம்பவத்தில் மொத்தம் 19 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. 

Crime: வீட்டுக்குள் புகுந்து பெண்ணை கடத்திய விவகாரம்: 19 பேர் மீது வழக்குப் பதிவு; 12 பேருக்கு போலீஸ் வலைவீச்சு..!

இதையடுத்து, அவர்களில் மயிலாடுதுறை திருவிழந்தூரைச் சேர்ந்த செந்தில்குமார் (25), சேந்தங்குடியைச் சேர்ந்த தினேஷ்குமார் (22), ஆனந்ததாண்டபுரம் சாலையை சேர்ந்த சஞ்சய் (19), பூம்புகார் சாலை பகுதியைச் சேர்ந்த மனோஜ் (24) ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பாக மேலும் 12 பேரை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர். 147, 148, 294(b), 324, 307, 366, ஆர்ம்ஸ்ஆக்ட் ஆகிய 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!

PSLV-C59: கடைசி 50 நிமிடத்தில் திடீர் மாற்றம்: இஸ்ரோ ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைப்பு.! காரணம் என்ன?

Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!

WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sukhbir Singh Badal: EX Deputy CM  மீது துப்பாக்கிச்சூடு! பயங்காவாதி தொடர்பா?Rahul, Priyanka Visit Sambhal : ”உள்ளே வராதீங்க ராகுல்” தடுத்து நிறுத்திய போலீசார் பாத்துக்கலாம் Bro! பிரியங்கா சவால்!நேற்று சேறு, இன்று பேனர்... கடும் கோபத்தில் மக்கள்! தலைவலியில் பொன்முடி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!
Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!
PSLV-C59: கடைசி 50 நிமிடத்தில் திடீர் மாற்றம்: இஸ்ரோ ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைப்பு.! காரணம் என்ன?
PSLV-C59: கடைசி 50 நிமிடத்தில் திடீர் மாற்றம்: இஸ்ரோ ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைப்பு.! காரணம் என்ன?
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
Pushpa 2 : நம்பி வாங்க!  புஷ்பா 2  அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?

Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல்  புகார் - பெரும் பரபரப்பு

சபரிமலையில் போதைப் பொருள்... கேரள போலீசார் விடுத்த எச்சரிக்கை என்ன?

Chennai OSC Recruitment: 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; நேர்காணல் மட்டுமே- தமிழக அரசுத் துறையில் பணி- விண்ணப்பிப்பது எப்படி?

Embed widget