முஸ்லீம் மதத்திற்கு மாற நினைத்த மனைவி - சந்தேகத்தில் மொத்த குடும்பத்தை போட்டு தள்ளிய கணவன்!
வாய்ஸ் மெசேஜ்ஜில், ஒரு பெண் மனைவியை இஸ்லாம் மதத்துக்கு மாற்ற முயற்சிப்பதாகவும், தற்கொலைக்கு பெண் தான் காரணம் என்றும் கூறினார்.
கர்நாடகாவின் மங்களூரு நகரில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் நேற்றுமுன் தினம் இறந்து கிடந்தனர். 30 வயதுடைய நபர் ஒருவர் மதமாற்றம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளைக் கொன்று தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்தனர்.
30 வயதான அவரது 26 வயது மனைவி, அவர்களது 8 வயது மகள் மற்றும் 4 வயது மகன் ஆகியோரின் சடலங்கள் அவர்களது வீட்டில் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அந்த நபர் காலை 10.45 மணியளவில் மங்களூரு தெற்கு காவல் நிலைய உதவி சப்-இன்ஸ்பெக்டருக்கு தற்கொலை செய்து கொண்டதாக வாய்ஸ் மெசேஜ் அனுப்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாய்ஸ் மெசேஜ்ஜில், ஒரு பெண் மனைவியை இஸ்லாம் மதத்துக்கு மாற்ற முயற்சிப்பதாகவும், தற்கொலைக்கு பெண் தான் காரணம் என்றும் கூறினார். அத்துடன், மரணக் குறிப்பின் புகைப்படத்தையும் அனுப்பியுள்ளார். இதனைத்தொடர்ந்து, ஒரு குழு அந்த நபரின் வீட்டிற்கு அனுப்பப்பட்டு, உடல்கள் மீட்கப்பட்டன.
வாய்ஸ் மெசேஜ்ஜில் குறிப்பிடப்பட்டுள்ள பெண் மீது மங்களூரு தெற்கு போலீசார் தானாக முன்வந்து இந்திய தண்டனைச் சட்டம் (தற்கொலைக்கு தூண்டுதல்) பிரிவு 306 இன் கீழ் வழக்கு பதிவு செய்து, அவர் கைது செய்யப்பட்டார்.
தம்பதியினருக்குள் பிரச்சனைகள் இருந்ததாகவும், குடிப்பழக்கம் இருந்த அந்த நபர், மனைவியிடம் குடும்ப வன்முறையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த அக்டோபரில், அவர் மனைவி வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர், மனைவியை கண்டுபிடித்து கொடுக்குமாறு கணவர் போலீசாரிடம் புகார் அளித்தார்.
விசாரணையின் போது, அந்த பெண், தான் பழகிய ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதாகவும், அதே பெண், தனது மனைவியை இஸ்லாம் மதத்திற்கு மாற்ற முயற்சிப்பதாக கணவர் புகார் கூறினார்.
அதன்பிறகு, “மனைவி காவல் நிலையத்தில் ஆஜராகி, தன் கணவரிடம் திரும்பிச் செல்வதாகக் கூறினார். பிறகு என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் தனது மனைவி மதம் மாறிவிடுவார் என்று அந்த நபர் சந்தேகிப்பதாகத் தெரிகிறது. மேலும் தம்பதியினரிடையே மீண்டும் பிரச்சனைகள் வெளிவந்தன” என்று பெயர் தெரியாத காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்