மேலும் அறிய

அடகொடுமையே..! 20 ரூபாய் வழக்கு.. செய்யாத தப்புக்கு 30 வருட ஜெயில்.. விடுதலையானதுமே நடந்த கொடுமை

குஜராத்தில் செய்யாத குற்றத்திற்காக 30 வருட ஜெயில் தண்டனையை அனுபவித்தார், விடுதலையான மறுநாளே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் 20 ரூபாய் வழக்கில் செய்யாத குற்றத்திற்காக ஒருவர் 30 வருடம் ஜெயிலில் இருந்தது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

30 வருட ஜெயில் தண்டனைக்குப் பிறகு மரணம்

ஆங்கிலத்தில் மிகவும் பிரபலமான ஷஷாங்க் ரிடெம்ப்ஷன் திரைப்படத்தின் உண்மை சம்பவமாக குஜராத்தில் ஒரு நிகழ்வு அரங்கேறியுள்ளது. ஆனால், அந்த நபர் இன்னும் சிறிது காலம் மகிழ்ச்சியுடன் இருந்து இருந்தால், அவருக்கு இது ஒரு நல்ல முடிவாக இருந்து இருக்கும். குஜராத்தில் ஒருவர் ரூ.20 லஞ்சம் வாங்கியதற்காக 30 ஆண்டுகள் சிறையில் இருந்த பிறகு நிரபராதி என அறிவிக்கப்பட்டார். கடந்த 4ம் தேதி குஜராத் நீதிமன்றம் அவரை நிரபராதி என அறிவித்தபோது, ”என் வாழ்க்கையில் என் மீதிருந்த களங்கம் நீக்கப்பட்டுவிட்டது. கடவுள் என்னை இப்போது அழைத்துச் சென்றாலும், எனக்கு எந்த துக்கமும் இருக்காது," என்று அவர் மகிழ்ச்சிபட பேசியது குறிப்பிடத்தக்கது.

வழக்கில் குற்றச்சாட்டு என்ன? 

 காவல்துறையில் காவலராய் பணியாற்றி வந்த பாபுபாய் பிரஜாபதி அகமதாபாத்தில் பணியமர்த்தப்பட்டபோது, ​​அவர் ரூ.20 லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 1997 ஆம் ஆண்டு  அமர்வு நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றச்சாட்டுகள் 2002 ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்டன. சாட்சி விசாரணைகள் 2003 இல் தொடங்கின, 2004 ஆம் ஆண்டு, அமர்வு நீதிமன்றம் பிரஜாபதிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.3,000 அபராதமும் விதித்தது.

விடுதலையான மறுநாளே மரணம்

குஜராத் உயர் நீதிமன்றத்தில் பிரஜாபதி அமர்வு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். அதன் பிறகு, இந்த ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி அவர் நிரபராதி என்று தீர்ப்பு வரும் வரை, அவரது மேல்முறையீடு 22 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது -  சாட்சிகளின் வாக்குமூலங்களில் கடுமையான முரண்பாடுகள் இருப்பதாகவும், குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதாகவும் நீதிமன்றம் கூறியது. பிரஜாபதியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிதின் காந்தி, முழு வழக்கும் சந்தேகத்தின் அடிப்படையில் அமைந்திருப்பதாக உயர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.

 தீர்ப்புக்குப் பிறகு, பிரஜாபதி தனது வழக்கறிஞர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மகிழ்ச்சியில் திளைத்து, இப்போதே மரணித்தாலும் எனக்கு மிகவும் மகிழ்ச்சி தான் என பேசியுள்ளார். எதிர்பாராத விதமாக, விடுதலையாகி வீடு திரும்பிய மறுநாளே அந்த வார்த்தைகள் பலித்து, மறுநாளே பிரஜாபதி உயிரிழந்துள்ளார்.

பொய்யால் வாழ்க்கையை இழந்த காவலர்

செய்யாத குற்றத்திற்காக சிறையிலெயே தனது வாழ்வின் பெரும் பகுதியை இழந்தவர்,  இனியாவது சிறிது வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்று அவரது நலம் விரும்பிகள் வேதனை தெரிவித்தனர். இந்திய குற்றவியல் சட்டம் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதற்கு பிரஜாபதி வழக்கு உதாரணம் எனவும் சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த மரணம் தொடர்பாக பேசிய அவரது வழக்கறிஞர்,  "நான் அவரிடம் ஐயா, நீங்கள் அரசாங்கத்திலிருந்து பெற வேண்டிய அனைத்து சலுகைகளுக்கும் விண்ணப்பிக்க வேண்டும்” என்று சொன்னேன். மறுநாள் அவரை மீண்டும் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயன்றேன். ஆனால் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது," என்று வழக்கறிஞர் வேதனை தெரிவித்தார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Embed widget