கரூர் : கண்டெய்னர் லாரியை கடத்திய ஆசாமியை சேஸிங்கில் சென்று மடக்கிப்பிடித்த போலீசார்..!
கரூர் அருகே சினிமா பாணியில் கண்டெய்னர் லாரியை விரட்டிச் சென்று போலீசார் மடக்கிப் பிடித்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்தவர் வேல்சக்கைய்யா வயது 49, இவர் கண்டெய்னர் லாரி ஓட்டுனர். இவர் தர்மபுரியில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு பதப்படுத்தப்பட்ட வெள்ளரிக்காய் ஊறுகாய் பெட்டிகளை கண்டெய்னர் லாரியில் ஏற்றிக்கொண்டு தர்மபுரியில் இருந்து சேலம் வழியாக கரூர் மதுரை வழியாக தூத்துக்குடி சென்று கொண்டிருந்த நிலையில் கரூர் அருகே டீக்கடையில் டீ அருந்த தனது கண்டெய்னர் லாரியை கரூர் ஆட்டம் பரப்பு என்னும் இடத்தில் டீக்கடை ஓரமாக நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றுள்ளார்.
கண்டெய்னர் லாரியில் அதிக பாரம் இருந்ததால் இஞ்சினை ஆப் செய்யாமல் சாவியுடன் லாரி இயங்கியபடியே ஓடிக்கொண்டிருந்தது. பின்னர் லாரியின் ஓட்டுநர் எதிர்பாராத நிலையில் அவ்வழியே வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் கண்டெய்னர் லாரி இஞ்சினை ஆப் செய்யாமல் இயங்கிக் கொண்டிருப்பதை உன்னிப்பாக கவனித்த நிலையில் சரசரவென்று லாரி மீது ஏறி அந்த வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது லாரி ஓட்டுநர் அவரைப் பிடிக்க முயற்சித்துள்ளார். அவர் அதிவேகமாக லாரியை இயக்கியதால் லாரி ஓட்டுநர் டீக்கடை உரிமையாளர் உதவியுடன் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அப்பகுதியில் ரோந்து போலீசார் தகவல் கிடைத்தவுடன் அந்த கண்டெய்னர் லாரியை விரட்டி சென்று புத்தாம்பூர் ஜவுளிபூங்கா அருகே மடக்கிப் பிடித்தனர்.
மேலும், கண்டெய்னர் லாரி திருடி சென்றவர் பற்றி போலீசார் அவர்கள் பாணியில் விசாரித்தபோது அவர் சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள சின்னத்தாம்பட்டி ராம்ஜத்மலானி (எ) ராமமூர்த்தி வயது 27 என்ற நபர் என அடையாளம் காணப்பட்ட அவரை தாந்தோன்றிமலை போலீசாரிடம் ரோந்து பணியில் இருந்த போலீசார் ஒப்படைத்தனர். சினிமா பாணியில் கண்டெய்னர் லாரியை விரட்டிச் சென்று போலீசார் மடக்கிப் பிடித்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதைத் தொடர்ந்து, அந்த குற்றவாளி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார். கண்டெய்னர் லாரியை திருட என்ன காரணம் என்றும் அதேபோல் ,அந்த குற்றவாளி மீது வேறு ஏதேனும் வழக்குகள் உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கண்டெய்னர் லாரியை சேலத்தை சேர்ந்த நபர் சேலத்திலிருந்து பின் தொடர்ந்து வந்து உள்ளாரா, அல்லது வேறு எங்கும் இருந்து இந்த லாரியை பின்தொடர்ந்து வந்துள்ளாரா என்ற அடிப்படையிலும் இந்த லாரியை கடத்த வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளன உள்ளனவா என பல்வேறு கோணத்தில் தாந்தோன்றிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் அருகே சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியை திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.