Malayalam Actress : மாலில் நடந்த ப்ரோமோஷன்..! பொதுவெளியில் மலையாள நடிகைகளுக்கு பாலியல் தொல்லை..! நடந்தது என்ன..?
கோழிக்கோடு நிறுவனத்தில் பிரபல மாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மலையாள நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![Malayalam Actress : மாலில் நடந்த ப்ரோமோஷன்..! பொதுவெளியில் மலையாள நடிகைகளுக்கு பாலியல் தொல்லை..! நடந்தது என்ன..? Malayalam actresses alleges physical assault at mall in Kozhikode Malayalam Actress : மாலில் நடந்த ப்ரோமோஷன்..! பொதுவெளியில் மலையாள நடிகைகளுக்கு பாலியல் தொல்லை..! நடந்தது என்ன..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/28/5a65cc8bab3f13384e353e5772311a451664356589541102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கேரளாவில் அமைந்துள்ளது கோழிக்கோடு. கோழிக்கோட்டில் அமைந்துள்ள பிரபல தனியார் வணிக வளாகத்தில் மலையாளத்தில் உருவாகி வரும் பிரபல திரைப்படம் ஒன்றின் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர், படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், இயக்குனர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் மற்றும் நடிகைகளை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் வணிக வளாகத்தில் குவிந்தனர். அப்போது, நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நடிகையை ரசிகர்கள் சூழ்ந்தனர். அப்போது, ரசிகர் என்ற போர்வையில் வந்த சிலர் நடிகையிடம் அத்துமீறி நடந்து கொண்டுள்ளனர். இதனால், நடிகை மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக, அந்த பிரபல நடிகை தனது இன்ஸ்டாகிராமில் கடும் வேதனையை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக, அவர் பதிவிட்டுள்ளதாவது, “ கோழிக்கோடு பகுதியை அதிகளவில் விரும்புகிறேன். ஆனால், இன்று நிகழ்ச்சி முடிந்து இரடு திரும்பியபோது, கூட்டத்தில் இருந்த ஒரு நபர் என்னிடம் அநாகரீகமாக நடந்து கொண்டார். எந்த இடம் என்று சொல்ல எனக்கு அருவருப்பாக உள்ளது.
நாங்கள் பல இடங்களில் ப்ரோமோஷனுக்கு சென்றுள்ளோம். ஆனால், இதுபோன்ற மோசமான அனுபவம் எனக்குவேறு எங்கும் ஏற்பட்டதில்லை. என்னுடைய சக நடிகைக்கும் இதுபோன்ற அனுபவம் இருந்துள்ளது. அவர் அதற்கு உடனடி ரியாக்ட் செய்தார். ஆனால், ஒரு கணம் நான் திகைத்து போனதால் என்னால் அந்த சூழ்நிலையில் உடனே ரியாக்ட் செய்ய முடியவில்லை.”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
ஒரு பொது வெளியில், அதுவும் படத்தின் ப்ரோமோஷன் விழாவின்போது மலையாள நடிகை இதுபோன்ற அநாகரீகமான நிகழ்வைச் சந்திக்க நேரிட்டது திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருவதுடன், இந்த அநாகரீக சம்பவத்தில் ஈடுபட்ட நபர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், திரைப்பட நிகழ்விற்கு வரும் நடிகைகள் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த குற்ற நிகழ்வு தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதுடன், குற்றவாளியை தேடும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க : Manju Warrier: ‘பிரியாத வரையில் பயணம் சாகசமாகாது’ - அஜித் உடன் பயணம்... மனம் திறந்த மஞ்சுவாரியர்!
மேலும் படிக்க :PS-1 vs GOT: மணிரத்னம் சொல்வது உண்மையா? கேம் ஆஃப் த்ரோன்ஸ்தான் ஆங்கிலத்தின் பொன்னியின் செல்வனா! 5 ஒற்றுமைகள்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)