PS-1 vs GOT: மணிரத்னம் சொல்வது உண்மையா? கேம் ஆஃப் த்ரோன்ஸ்தான் ஆங்கிலத்தின் பொன்னியின் செல்வனா! 5 ஒற்றுமைகள்!
அரியணைக்கான சண்டை, ஒரு மன்னரின் எழுச்சி, தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தை மற்றும் இனப் பிரச்சினைகளுக்கான உருவகங்கள் போன்ற சில அடிப்படைக் கோட்பாடுகள் இரு கதைகளிலும் ஒருபோல உள்ளன என்பது உண்மைதான்.
![PS-1 vs GOT: மணிரத்னம் சொல்வது உண்மையா? கேம் ஆஃப் த்ரோன்ஸ்தான் ஆங்கிலத்தின் பொன்னியின் செல்வனா! 5 ஒற்றுமைகள்! Is GOT is the English Ponniyin selvan what maniratnam says true Five uncanny similarities between Ponniyin Selvan and Game of Thrones PS-1 vs GOT: மணிரத்னம் சொல்வது உண்மையா? கேம் ஆஃப் த்ரோன்ஸ்தான் ஆங்கிலத்தின் பொன்னியின் செல்வனா! 5 ஒற்றுமைகள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/28/f0cdd31788e6c6170aed1e190c445cb21664349008024109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சமீபத்தில் ஒரு பேட்டியில் மணிரத்னத்திடம் பொன்னியின் செல்வன் தமிழின் கேம் ஆஃப் த்ரோன்ஸா என்று கேட்டார். அதற்கு இல்லை கேம் ஆஃப் த்ரோன்ஸ்தான் ஆங்கிலத்தின் பொன்னியின் செல்வன் என்று பதில் அளித்தார். இது வெறும் வாய் வார்த்தை அல்ல, கல்கி கிருஷ்ணமூர்த்தியின் புத்தகங்கள் மற்றும் ஜார்ஜ் ஆர்.ஆர். மார்ட்டின் புத்தகங்களின் வெளியீட்டின் காலவரிசையைக் கருத்தில் கொண்டால், அவர் சொன்னதுபோலவும் இருந்திருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது.
டைம்லைன்
பொன்னியின் செல்வன் 1951-ல் கல்கி வார இதழில் வெளிவரத் தொடங்கியது. இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களும் ஐந்து பாகங்கள் கொண்ட நாவல் தொடராகத் தொகுக்கப்பட்டு 1955-ல் வெளிவந்தது. இந்தத் தொடரை 1993-ல் இந்திரன் நீலமேகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ஜார்ஜ் RR மார்ட்டினின் A Song of Ice and Fire, என்னும் Game of Thrones இன் முதல் புத்தகத்தை 1996 இல் வெளியிட்டார். இந்த டைம்லைன் மூலம் கேம் ஆஃப் த்ரோன்ஸ் பொன்னியின் செல்வனால் ஈர்க்கப்பட்ட கதை என்று கூறவில்லை, ஆனால் இரண்டிற்குமான் ஒற்றுமைகளை பார்த்துதானே ஆகவேண்டும். இந்தியாவில் இருந்து ஒரு படைப்பு ஆங்கிலத்தை ஈர்த்தது என்றால் அது பெருமைதான். வரலாற்றுப் புனைக்கதைகள் மற்றும் கற்பனை நாவல்கள் அரியணைக்கான சண்டை, ஒரு மன்னரின் எழுச்சி, தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தை மற்றும் இனப் பிரச்சினைகளுக்கான உருவகங்கள் போன்ற சில அடிப்படைக் கோட்பாடுகள் இரு கதைகளிலும் ஒருபோல உள்ளன என்பது உண்மைதான். தற்போது மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வனுக்கும் கேம் ஆஃப் த்ரோன்ஸ்க்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை இன்னும் வெளிப்படையாக பார்க்கலாம்.
தூமகேது - சிவப்பு வால் நட்சத்திரம்
இரண்டிலும் பேரழிவைப் பற்றிய முன்னறிவிப்பு வானத்தில் இருந்து தொடங்குகின்றன. பொன்னியின் செல்வனில் தூமகேது என்ற வால் நட்சத்திரம் வானில் தோன்றுவது கெட்ட காலத்தின் அடையாளமாக சித்தரிக்கப்படுகிறது. இதேபோல், கேம் ஆஃப் த்ரோன்ஸில், டேனெரிஸின் டிராகன் முட்டைகள் குஞ்சு பொரித்த பிறகு வெஸ்டெரோஸ் மற்றும் எஸ்ஸோஸின் வானத்தில் ஒரு சிவப்பு வால் நட்சத்திரம் தோன்றுகிறது.
அருள்மொழி வர்மன் - டேனெரிஸ் தர்காரியன்
பொன்னியின் செல்வனின் முக்கியப் பகுதி அருள்மொழி வர்மன் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்குத் திரும்புவதுதான். அருள்மொழி வர்மன் நாட்டைக் கைப்பற்ற ஈழத்திற்கு அனுப்பப்படுகிறார். அவருக்கு ஒரு மூத்த சகோதரர் ஆதித்த கரிகாலன் இருந்தாலும், தந்தைக்குப் பிறகு அருள்மொழி வர்மன்தான் வர வேண்டும் என்று பலர் விரும்புகிறார்கள். கேம் ஆஃப் த்ரோன்ஸில், எஸ்ஸோஸிலிருந்து வெஸ்டெரோஸ் வரையிலான டேனெரிஸ் தர்காரியனின் பயணம் பல பக்கங்களைக் கொண்டது. தன்னை சிம்மாசனத்தின் வாரிசாக கருதி தான் அதனை அவர் செய்வார். இரண்டு தொடர்களிலும் சிம்மாசனத்தின் வாரிசு என்ற சித்தரிப்பு இடம்பெறுகிறது. அவர்கள் இதற்காக தலைநகரில் இருந்து வெகு தொலைவில் இருந்து வருகிறார்.
பார்த்திபேந்திர பல்லவன் - தியோன் கிரேஜோய்
தியோன் கிரேஜோய், தனது விசுவாசம் ஸ்டார்க்ஸுக்காகவா அல்லது அவரது தந்தைக்காகவா என்னும் அடையாள நெருக்கடியை அந்த தொடர் முழுவதும் எதிர்கொள்கிறார் என்பது பார்த்தவர்களுக்கு நினைவிருக்கும். ஆனால் இறுதியில் அவர் ஸ்டார்க்ஸைக் காட்டிக் கொடுக்கிறார். அதே போல பொன்னியின் செல்வன் கதையிலும் பார்த்திபேந்திர பல்லவன் என்ற கதாபாத்திரம் உள்ளது. அவர் முற்காலத்தில் புகழ்பெற்ற ஆட்சியை செய்த பல்லவ வம்சத்தைச் சேர்ந்தவர். அவர் ஆதித்த கரிகாலனின் விசுவாசமான நண்பராக அறிமுகப்படுத்தப்படுகிறார், ஆனால் நந்தினி தேவியிடம் விழுந்து அவருக்கே துரோகம் செய்வதாக கதை நகரும்.
ரத்தபந்தத்தில் காதல்
டிராகன் குயின் மற்றும் ஜான் ஸ்னோ இடையேயான காதல் உங்களை நெகிழச் செய்திருந்தால், நந்தினிக்கும் ஆதித்த கரிகாலனுக்கும் இடையே நடக்கும் விஷயங்களைப் பற்றி நீங்கள் அதே ஆங்கிளில் யோசிக்கலாம். தொடக்கத்தில், கல்கி அவர்களை பிரிந்த காதலர்களாக சித்தரித்தார், ஆனால் ஐந்தாவது பாகத்தின் முடிவில், அவர்கள் இருவரும் உடன்பிறந்தவர்கள் என்று ஆச்சரியப்பட வைக்கிறார். பின்னர் விஷயங்கள் மாறினாலும், நாவலின் பெரும்பகுதி, நந்தினியும் கரிகாலனும் இரத்தத்தால் தொடர்புடையவர்கள் என்று கல்கி நம்ப வைக்கிறார்.
மரணத்திற்கு பிறகான அரியாசனம்
சீசன் 3 இன் ஒன்பதாவது எபிசோடான தி ரெயின்ஸ் ஆஃப் காஸ்டமேர் பற்றி அறிந்திருப்பீர்கள். ராப் ஸ்டார்க், வடக்கின் முன்னாள் மன்னர், இளம் ஓநாய், வடக்கில் உள்ள மக்களும் பார்வையாளர்களும் அவருக்காக வேரூன்றத் தொடங்கிய நேரத்தில் கொல்லப்பட்டார். அந்த எபிசோட் GOT இல் எதுவும் நடக்கலாம் என்பதை பார்வையாளர்களுக்கு உணர்த்தியது. கல்கி அத்தகைய ஒரு முக்கிய கதாபாத்திரத்தின் மரணத்தை காட்டுகிறார். அதன் பிறகு இரண்டு காதாப்பாதிரங்களில் அடுத்த ராஜாவாக மாறுவது யார் என்ற எதிர்பார்ப்பில்தான் கதை நகரும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)