Manju Warrier: ‘பிரியாத வரையில் பயணம் சாகசமாகாது’ - அஜித் உடன் பயணம்... மனம் திறந்த மஞ்சுவாரியர்!
நடிகை மஞ்சுவாரியர் அஜித்துடன் மேற்கொண்ட லடாக் பயணம் தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
நடிகை மஞ்சுவாரியர் அஜித்துடன் மேற்கொண்ட லடாக் பயணம் தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
இயக்குநர் ஹெச்.வினோத், அஜித் கூட்டணியில் முதலில் நேர்கொண்ட பார்வை, கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் ‘வலிமை’ படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால்,உடனடியாக ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தாக வேண்டிய கட்டத்திற்கு அஜித் தள்ளப்பட்டார். இதனால் மீண்டும் ஹெச். வினோத்தையே இயக்குநராக கமிட் செய்து, அதே வேகத்தோடு படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார்.
View this post on Instagram
படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் வேகமாக நடந்து வந்த நிலையில், சிறிய பிரேக் எடுத்துக்கொண்ட அஜித் ஐரோப்பிய நாடுகளில் பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் பின்னர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அஜித் மீண்டும் பிரேக் எடுத்துக்கொண்டு லடாக் பயணத்தை மேற்கொண்டார்.
View this post on Instagram
இதில் சர்ப்பிரைசாக படத்தின் கதாநாயகியான மஞ்சு வாரியரும் இணைந்து கொண்டார். அவர் அஜித்துடன் பயணம் செய்தது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலானது. இதனிடையே படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
View this post on Instagram
இந்த நிலையில் மஞ்சுவாரியர் தனது ட்விட்டர் பக்கத்தில் லடாக் பயணம் தொடர்பான சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
Travel doesn't become adventure until you leave yourself behind ❤️❤️❤️#thelehride2022 #ajithkumar #AK @suprej @sardar_sarfaraz #bineeshchandra pic.twitter.com/SvOZObIKEB
— Manju Warrier (@ManjuWarrier4) September 28, 2022
அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், “ உங்களை விட்டு நீங்கள் பிரியாத வரையில் பயணம் சாகசமாகாது” என்று பதிவிட்டு இருக்கிறார்.