மேலும் அறிய

'நம்பி வீட்டுக்குள் விட்டதற்கு இப்படி செஞ்சுட்டியே' ... தோழிக்கு உதவியதால் வந்த வினை

ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியின் ஏடிஎம் கார்டை திருடி 2.8 லட்சம் ரூபாயை அபேஸ் செய்து டெய்லர் கடை தோழி மூலம் நகை வாங்கி அடகுவைத்த  காய்கறிகடைகாரர்  மற்றும் அவருக்கு உதவிய டெய்லர் கடை தோழியும் கைது.

ஏ.டி.எம்., கார்டு மாயம்

மதுரை மாநகர் எல்லிஸ்நகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி கிருஷ்ணசாமி (வயது 72). இவரது, பிள்ளைகள் வெளிநாட்டில் இருப்பதால் இவர் மட்டும்  தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் காய்கறிகடை வைத்து நடத்தும் லட்சுமணன் என்பவர் 10 வருடங்களாக கிருஷ்ணசாமிக்கு பழக்கம் என்பதால் வீட்டிற்கு தினமும் லட்சுமணன் சிறு சிறு உதவிகளை செய்துவந்துள்ளார். இந்நிலையில் 12 ஆம் தேதியன்று வங்கிக்கு சென்றுவிட்டு லட்சுமணனின் காய்கறிகடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். பின்னர்  தனது பேக்கில் இருந்த பர்சை தேடி பார்த்ததாகவும் ஏ.டி.எம் கார்டை காணவில்லை என்றும் எங்கோ ஞாபக மறதியாக வைத்து விட்டோம் என தேடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது 15ஆம் தேதியன்று கிருஷ்ணசாமியின் செல்போனுக்கு ஒரு நகைக்கடை பெயரில் 15 மற்றும் 16ஆம் ஆகிய தேதியில் 2 லட்சத்து  80 ஆயிரத்து 810 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. 
 
திருடிய காசில் நகை

இதனால் அதிர்ச்சியடைந்த கிருஷ்ணசாமி காய்கறி கடைக்காரரான லட்சுமணனை உதவிக்கு அழைத்துக்கொண்டு வங்கிக்கு சென்று விசாரித்துவிட்டு, ஏடிஎம் கார்டை லாக் செய்துள்ளார். பின்னர் நகைக்கடைக்கு சென்று கிருஷ்ணசாமி விசாரித்தபோது பெண் ஒருவர் ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி 2 பவுன் நகையும் மறுநாள் 2 பவுன் நகையும் ஒன்றரை கிராம் நகையும் எடுத்ததாக கூறியுள்ளனர். இதனையடுத்து கிருஷ்ணசாமி கடைசியாக லட்மணனின் கடையில் வைத்து பையை எடுத்தது ஞாபகம் வந்த நிலையில் அவரிடம் இது குறித்து கேட்டுள்ளார். அப்போது லட்மணன் மற்றும் அவரது தோழியான நாகேஸ்வரி என்ற பெண்ணை அழைத்துவந்து, நாங்கள் உங்களது நகையை கண்டுபிடித்து தருகிறோம் என கூறியபோது கிருஷ்ணசாமி காவல் நிலையத்தில் தனக்கு தெரிந்த நபர் மூலமாக புகார் அளிக்கவுள்ளேன். அப்போது, தான் தான் உண்மை தெரியவரும் என கூறியுள்ளார். 
 
புகார் அளிக்க வேண்டாம்

இதனால் பதற்றமடைந்த  லட்சுமணன் மற்றும் அவரது தோழி நாகேஸ்வரி ஆகிய இருவரும் 17 ஆம் தேதி கிருஷ்ணசாமியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர் கிருஷ்ணசாமியிடம் பேசிய லட்சுமணன் ”நான் தான் நீங்க கடைக்கு வந்தப்ப உங்க பர்ஸ எடுத்து அதில் எழுதியிருந்த பின் நம்பரை வைத்து நகையை வாங்கி அதை  அடகு வைத்துவிட்டோம் என கூறியதோடு புகார் அளிக்க வேண்டாம்” என கூறியுள்ளனர். இதனையடுத்து கிருஷ்ணசாமி தனது உறவினர் மூலமாக மதுரை எஸ்.எஸ் காலனி காவல்நிலையத்தில் லட்சுமணன் மற்றும் நாகேஸ்வரி மீது புகார் அளித்துள்ளார். இதனையடுத்து எஸ்.எஸ் காலனி காவல்துறையினர் காய்கறி கடைக்காரரான லட்சுமணன் மற்றும் அவரது தோழியான நாகேஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காய்கறி கடைக்கு வந்த டெய்லர் தோழிக்கு உதவி செய்ய நம்பி வந்த வாடிக்கையாளரிடம் ஏடிஎம் கார்டு திருடி நகை வாங்கிய காய்கறி கடைக்காரர் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Embed widget