தமிழகத்தை சேர்ந்த 20 பேர் கஞ்சா கடத்தலுக்கு இடைத்தரகர்களாக செயல்படுகின்றனர் - மதுரை எஸ்.பி. சிவபிரசாத்
தமிழகத்திற்கு ஆந்திரா - ஒரிஸா எல்லையிலிருந்து கஞ்சா கடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தை சேர்ந்த 20 பேர் கஞ்சா கடத்தலுக்கு இடைத் தரகர்களாக செயல்படுவதாக மதுரை எஸ்.பி சிவ பிரசாத் பேட்டி

மதுரை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை விற்பனையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார். அதன்படி கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபடும் கொடுங்குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களுடைய சட்டவிரோத செயல்களை தடுக்கும் விதமாக மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களை சேர்ந்த கஞ்சா விற்பனை குற்றவாளிகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு ஆந்திரா - ஒரிஸா எல்லையிலிருந்து கஞ்சா கடத்தப்பட்டு வருகிறது, தமிழகத்தை சேர்ந்த 20 பேர் கஞ்சா கடத்தலுக்கு இடைத் தரகர்களாக செயல்படுவதாக மதுரை எஸ்.பி சிவ பிரசாத் பேட்டி#Madurai | @cannabisnewsnet | #Cannabis | @AgencyTamil | #TamilNadu | @worldcannanews1 | pic.twitter.com/mUSOyXtA8D
— Arunchinna (@iamarunchinna) July 23, 2022

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















