மேலும் அறிய
Advertisement
மதுரையில் ‛எஞ்சாயி எஞ்சாமி’ திருடன் சிக்கியது எப்படி ?
விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை ஆசை தீர ஓட்டிவிட்டு திருடியே இடத்திலேயே மீண்டும் வைக்கும் நூதன திருடன் கைது- காவல்துறை விசாரணை செய்துவருகின்றனர்.
பைக் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. குட்டி குழந்தை கூட தனது அப்பா பைக்கில் உட்கார்ந்து ஒரு ரவுண்ட் போக தான் அடம்பிடிக்கும். நெடுந்தூரம் பயணம் கொஞ்சம் காபி, டீ என்று ரசித்து ரசித்து பைக் ஓட்டும் நபர்கள் ஏராளம். இந்நிலையில் மதுரையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனக்கு ஓட்ட பிடிக்கும் பைக்குளை எல்லாம் திருடித், திருடி ஓட்டி எஞ்சாயி எஞ்சாமி செய்துள்ளார். தொடர்ந்து பைக் திருட்டில் ஈடுபட்ட பைக் காதலன் சி.சி.டி மூலம் சிக்கினார். மதுரை கரிமேடு, தல்லாகுளம், கோரிப்பாளையம் பகுதிகளில் கடந்த சில தினங்களாக டூவீலர் திருட்டு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்ட இடங்களில் கைப்பற்றப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த நவீன்குமார் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் அவரை கைது செய்து நடத்திய விசாரணையில் அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கேட்டரிங் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு 10-ம் வகுப்பு சிறுமியை காதலித்து திருமணம் செய்ததால் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றுவந்ததுள்ளார்.
இவருக்கு விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை ஓட்ட வேண்டும் என்பது ஆசையாக இருந்ததுள்ளது. இதன் காரணமாக இரவு நேரங்களில் விலையுயர்ந்த இருசக்கர வாகனங்களை திருடி அதனை சில நாட்கள் ஒட்டி பார்த்து விட்டு மீண்டும் திருடிய இடத்திலேயே போட்டு விட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்ததோடு, மதுரை மாநகரில் நடைபெற்ற இருசக்கர வாகன திருட்டு வழக்குகளில் இவருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் -Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!
பிடித்த பைக்க ஓட்டுவது தவறில்லை சொந்தமா வாங்கி ஓட்டனும் பாஜூ என திருடனுக்கு போலீஸ் அறிவுரை வழங்கியுள்ளனர்.
மேலும் காவல்துறையினர் சிலர் நம்மிடம் - மதுரையில் குறிப்பிட்ட சில பைக்குளை மட்டும் கொள்ளையர்கள் அதிகளவு குறி வைத்து திருடிச் செல்கின்றனர். வெளியூர் செல்லும் நபர்கள் வண்டியை பைக் ஸ்டாண்டில் போடாமல் திருந்தவெளியில் கடை ஓரங்களில் விட்டுச் செல்வது ஆபத்தானது. எனவே முடிந்தவரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றனர்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
ஐபிஎல்
சென்னை
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion