காரில் சென்ற தம்பதியிடம் ரூ.50 லட்சம் வழிப்பறி வழக்கு; 5 பேர் கைது, பணம் பறிமுதல்
மேலூர் அருகே காரில் கொண்டு செல்லப்பட்ட 50 லட்சம் பணத்தை வழிப்பறி செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் ஆயுதப்படை காவலர் உள்பட ஐந்து பேர் 24 மணி நேரத்தில் காவல் துறையிடம் சிக்கினர்
மதுரை தெப்பக்குளத்தைச் சேர்ந்தவர் சேக் தாவூத் துணி வியாபாரம் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது காரில் அவரது மனைவி யூசுப் சுலைஹா மற்றும் ஆக்டிங் டிரைவர் அபுபக்கர் சித்திக் ஆகிய மூவரும் 50 லட்சம் ரூபாய் பணத்துடன் காரில் திருச்சி நோக்கி அங்குள்ள உறவினர் வீட்டிற்கு நள்ளிரவில் புறப்பட்டனர். அப்போது திருச்சுனை பிரிவு நான்கு வழிச்சாலையில் காவலர் போல நின்றிருந்த இருவர் வாகன சோதனை செய்துள்ளனர். இருப்பதைக் கண்ட ஓட்டுனர் சித்திக் காவலர் தானே என நினைத்து வண்டியை ஓரங்கட்டியுள்ளார். அப்போது வாகனத்தை சோதனை செய்த காவலர் தோற்றத்தில் இருந்த இரு நபர்கள் கையில் இருந்த 50 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டும் சேக் தாவூத் செல்போனையும் பறித்து கொண்டு ஆவணத்தை காட்டிவிட்டு கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் பெற்றுக் கொள்ளுமாறு அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றனர்.
பின் தொடர்ந்த சேக் தாவூத் கொட்டாம்பட்டி காவல் நிலையத்திற்கு சென்றபோது அங்கு ஏமாற்றப்பட்டு இருப்பது தெரியவந்தது . இதனையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை துவக்கினர். மேலும் சம்பவ இடத்தின் அருகே உள்ள பேக்கரி கடையில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் மூன்று தனிப்படைகள் அமைத்து மாவட்ட எஸ்பி சிவபிரசாத் உத்தரவிட்டார். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. இந்த 50 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் ஆக்டிங் டிரைவர் அபூபக்கர் சித்திக் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. 50 லட்சம் பணத்துடன் திருச்சி நோக்கி காரில் செல்லும் விவரத்தை அவரது கூட்டாளிகளான மதுரை மாநகர் ஆயுதப்படையில் காவலராக பணிபுரியும் நாகராஜன் கோகுல பாண்டியன் மற்றும் பார்த்தசாரதி ,அசன்முகமது, சதாம் உசேன் உள்ளிட்டோருக்கு தகவல் தெரிவித்துள்ளார் . அதன் பேரில் வாகனத்தில் செல்லும்போது பணத்தை வழிப்பறி செய்வது திட்டமாக இருந்தது.
இதில் காவலரான நாகராஜ கோகுல பாண்டியன் மற்றும் பார்த்தசாரதி ஆகிய இருவரும் காக்கி பேண்ட் அணிந்து மேலே ஜெர்கின் அணிந்தவாறு போலீஸ் போல வாகன தணிக்கையில் ஈடுபட்டு நடித்து பணத்தை எடுத்துச் சென்று மதுரையில் பதுங்கியுள்ளனர். இந்த விபரங்கள் கார் ஓட்டுநர் சித்திக்கிடம் போலீசார் நடத்தி விசாரணையில் இந்த விபரங்கள் தெரியவந்தது. இதனையடுத்து 5 பேரையும் கைது செய்து அவர்கள் வழிப்பறி செய்த பணத்தில் 49 லட்சத்து 25 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கப்பணம், செல்போன்கள், ஒரு இருசக்கர வாகனம், ஒரு கார் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்து 24 மணி நேரத்தில் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பறிபோன இந்த 50 லட்சம் பணம் ஹவாலா பணமாக கை மாறியதும் தெரியவந்ததையடுத்து அது தொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் வருமானவரித்துறைக்கும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்