மேலும் அறிய
மதுரை: மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியரை கைது செய்யக் கோரி மாதர் சங்கம் போராட்டம்!
”போட்டோவுக்கு போஸ் கொடுத்தது போதும் எந்திரிங்க” - என மாதர்சங்கத்தினரை காவல்துறையினர் கேலி செய்ததாக கூறி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாதர் சங்கத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்
Source : whatsapp
மதுரை மாநகரில் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியரை கைது செய்ய கோரி - அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை மாநகர் சுப்பிரமணியபுரம் காவல்நிலைய எல்கைக்கு உட்பட்ட அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில், பயிலும் மாணவிகள் சிலருக்கு ஆண் ஆசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீதும், மாணவிகளின் புகார் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் ஆகிய மூன்று பேர் மீது மதுரை மாநகர் திலகர்திடல் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முழக்கங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்
இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆண் ஆசிரியர் ஜெயராமை கைது செய்ய கோரி, அனைத்திந்திய மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆகியோர் இணைந்து மதுரை மாநகர் தெற்குவெளி பகுதியில் பகுதியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆசிரியரை கண்டித்தும், ஆசிரியர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போட்டோவிற்கு போஸ்கொடுத்தது போதும் எந்திரிங்க
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், கலைந்து செல்ல மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்றனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்தபோது, காவல்துறையினர் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டனர். இதனை தொடர்ந்து காவல்நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய மாதர் சங்கத்தினரை பார்த்து ”போட்டோவிற்கு போஸ்கொடுத்தது போதும் எந்திரிங்க” - என காவல்துறையினர் கேலியாக பேசியதாக கூறி காவல்துறையினருக்கு எதிர்ப்பு தெரிவித்து மாதர் சங்கத்தினர் காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.
போக்குவரத்து நெரிசல்
பின்னர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்கத்தினரை கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். மதுரை மாநகரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியரை கைது செய்யக்கோரி, அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதோடு, போக்குவரத்து நெரிசலும் உருவானது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement




















