மேலும் அறிய
மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கில்.. டி.எஸ்.பி., உள்ளிட்டோருக்கு முன் ஜாமின்? தீர்ப்புக்காக ஒத்திவைப்பு !
முன் ஜாமின் கோரிய மனு நீதிபதி தனபால் முன் விசாரணைக்கு வந்தது, அப்போது இந்த மனு மீது நாளை தீர்ப்பு வழங்கப்படும் என உத்தரவிட்டார்.

மடப்புரம் காளி கோயில்
மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கில் மானாமதுரை டி.எஸ்.பி., சண்முகசுந்தரம், ரமேஷ்குமார் உள்ளிட்டோர் முன்ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை தீர்ப்புக்காக ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
தனிப்படை போலீசார் தாக்கியதில் அஜித்குமார் இறந்தார்
மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பேராசிரியை நிகிதா காரிலிருந்த நகை திருடுபோனதாக திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். தனிப்படை போலீசார் தாக்கியதில் அவர் இறந்தார். இவ்வழக்கை சி.பி.ஐ.,விசாரிக்கிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள, மானாமதுரை டி.எஸ்.பி.,சண்முகசுந்தரம், இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சிவக்குமார், இளையராஜா ஆகியோர் முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளை மனு தாக்கல் செய்திருந்தனர், இந்த மனு நீதிபதி தனபால் முன் விசாரணைக்கு வந்தது, அப்போது இந்த மனு மீது நாளை தீர்ப்பு வழங்கப்படும் என உத்தரவிட்டார்.
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion





















