மேலும் அறிய

ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!

"அம்பத்தூர் பெண் கொலை வழக்கு, மர்ம கும்பல் தாக்குதல் என நாடகம் ஆடிய கணவன் கைது செய்யப்பட்டார்."

சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வைதேகி (34). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மேனாம்பேடு பகுதியில் பலத்த வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்துள்ளார். இது குறித்துத் தகவல் அறிந்த புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலைக் கைப்பற்றி முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர். அப்போது, ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் ஒன்று வைதேகியைத் துரத்திச் சென்று கொடூரமாக வெட்டிக்கொலை செய்துவிட்டுத் தப்பியோடிவிட்டதாக அப்பகுதியில் தகவல் பரவியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டது.

கண்காணிப்புக் கேமரா காட்சிகள் தந்த திருப்பம்

இக்கொலை தொடர்பாக உண்மை நிலவரத்தைக் கண்டறியத் தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமரா (CCTV) காட்சிகளையும், அதில் பதிவான ஆட்டோவின் பதிவு எண்ணையும் வைத்துப் போலீசார் ஆய்வு செய்தனர். அந்த விசாரணையின் முடிவில், வழக்கில் யாருமே எதிர்பாராத திடீர் திருப்பம் ஏற்பட்டது. வைதேகியைக் கொலை செய்தது வேறு யாரோ மர்ம நபர்கள் அல்ல; அவரது கணவரும் ஆட்டோ ஓட்டுநருமான சின்னா (36) என்பவரேதான் என்பது அம்பலமானது.

ஆட்டோவில் நடந்த கொடூரம்

கணவன் சின்னாவுக்கு, மனைவி வைதேகியின் நடத்தை மீது சந்தேகம் இருந்து வந்துள்ளது. மேலும், அவர் வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி, அதனைச் சின்னா தொடர்ந்து கண்டித்து வந்ததாகத் தெரிகிறது. ஆனால், வைதேகி அதைப் பொருட்படுத்தாததால் ஆத்திரமடைந்த சின்னா, சம்பவத்தன்று தன் மனைவியை ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளார். வழியில் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரத்தின் எல்லைக்கே சென்ற சின்னா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வைதேகியின் கழுத்து, மார்பு மற்றும் வயிறு ஆகிய பகுதிகளில் சரமாரியாகக் குத்திக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

போலீசாரின் மின்னல் வேக நடவடிக்கை

மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, மர்ம கும்பல் கொலை செய்தது போலச் சித்தரித்துவிட்டுச் சின்னா தலைமறைவாகத் தன் வீட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளார். இருப்பினும், கண்காணிப்புக் கேமரா ஆதாரங்களின் அடிப்படையில் செயல்பட்ட அம்பத்தூர் போலீசார், சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே சின்னாவைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். தற்போது அவரிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Holiday Special Bus : சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Embed widget