மேலும் அறிய
Advertisement
உசிலம்பட்டி அருகே பெண் சிசு கொலையா ? - போலீசார் தீவிர விசாரணை
காவல் நிலைய போலீசார் பெண் சிசு கொலையாக என்ற கோணத்தில் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உசிலம்பட்டி அருகே பிறந்து 28 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் சிசு கொலையா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#madurai | உசிலம்பட்டி அருகே பிறந்து 28 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது - பெண் சிசு கொலையா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
— arunchinna (@arunreporter92) September 2, 2023
Further reports to follow - @abpnadu |#abplive @LPRABHAKARANPR3 @HannahDaniel127 pic.twitter.com/jhCrrEh8QP
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீழப்பட்டியைச் சேர்ந்தவர் ரஞ்சித் - லாவண்யா தம்பதி. விவசாய கூலி தொழிலாளியான இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இந்த தம்பதிக்கு கடந்த ஆகஸ்ட் 5- ஆம் தேதி உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் இரண்டாவதாக சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. நல்ல ஆரோக்கியத்துடன் பிறந்த குழந்தையை 5வது நாளில் தாயும் சேயும் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்று காலை குழந்தைக்கு பால் கொடுத்து தனது மூத்த மகள் துணையுடன் தூங்க வைத்துவிட்டு விவசாய பணிகளை தாய் லாவண்யா செய்து கொண்டிருந்தாக கூறப்படுகிறது. நேரம் கழித்து குழந்தையை வந்து பார்த்த போது மயக்க நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து, 108 ஆம்புலென்ஸ் மூலம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அரசு மருத்துவமனையில் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்., இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தை பிறந்து 28 வது நாளிலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விக்கிரமங்கலம் காவல் நிலைய போலிசார் பெண் சிசு கொலையாக என்ற கோணத்தில் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.,
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - உசிலம்பட்டி அருகே சக்தி வாய்ந்த, சங்கிலிகருப்பு - சீலக்காரியம்மன் கோயிலில் புனரமைப்பு பணிக்கான பூமி பூஜை
மேலும் செய்திகள் படிக்க - மீனாட்சியம்மன் கோயிலில் சக பெண் எம்பிக்கு வளையல், சாமி படத்தை வாங்கி பரிசளித்த கனிமொழி எம்.பி.
செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க - Aditya L1 Launch LIVE: ஆதித்யா எல் 1 விண்கலம் - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்..
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion