Aditya L1 Launch LIVE: ஆதித்யா எல் 1 விண்கலம் - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்..
Aditya L1 Mission Launch LIVE Updates: சந்திரயான் சாதனை படைத்ததை தொடர்ந்து அடுத்த சாதனையை படைக்க தயார் நிலையில் உள்ளது இஸ்ரோ. சூரியனை ஆராய ஆதித்யா எல்1 என்ற விண்கலத்தை இஸ்ரோ தயார் செய்துள்ளது.
LIVE
Background
சந்திரயான் சாதனை படைத்ததை தொடர்ந்து அடுத்த சாதனையை படைக்க தயார் நிலையில் உள்ளது இஸ்ரோ. சூரியனை ஆராய ஆதித்யா எல்1 என்ற விண்கலத்தை இஸ்ரோ தயார் செய்துள்ளது.
இந்த ஆதித்யா எல்1 விண்கலம் விண்ணில் பாய்வதற்கான கவுண்டவுன் நேற்று தொடங்கியது. இந்நிலையில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 11.50 மணிக்கு ஆதித்யா எல்1 விண்கலம் விண்ணில் ஏவப்படுகிறது. சூரியனை ஆய்வு செய்யும் முதல் இந்திய விண்கலம் இதுதான். PSLV C-57 என்ற ராக்கெட் மூலம் இந்த விண்கலம் விண்ணிற்கு அனுப்பப்படுகிறது.
1,485 கிலோ எடை கொண்ட ஆதித்யா எல்1 விண்கலம் 125 நாட்கள் பயணம் மேற்கொண்டு எல்1 பகுதியை அடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ தொலைவில் லாக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன் எனும் பகுதியில் நிலைநிறுத்தப்படும். ஆதித்யா எல்1 விண்கலம் சூரியனின் வெப்பசூழல், கதிர்வீச்சு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளும்.
ஆதித்யா எல் 1 விண்கலம் - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்..
சூரியனை ஆய்வு செய்வதற்கான முதல் மிஷன் ஆதித்யா எல் 1, இதனை செயல்படுத்தியதறகாக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தனது வாழ்த்துக்களை பிரதமர் மோடி தெரிவித்துக்கொண்டார். மேலும் ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக ரக்கெட்டில் இருந்து பிரிந்து, தற்போது பூமியின் சுற்றுப்பாதையில் நிலை நுழைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
After the success of Chandrayaan-3, India continues its space journey.
— Narendra Modi (@narendramodi) September 2, 2023
Congratulations to our scientists and engineers at @isro for the successful launch of India’s first Solar Mission, Aditya -L1.
Our tireless scientific efforts will continue in order to develop better…
சாதனை படைத்த இஸ்ரோ.. ராக்கெட்டிலிருந்து பிரிந்தது ஆதித்யா எல் 1 விண்கலம்..
சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1 விண்கலம் ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாக விண்கலம் பிரிந்ததாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமியில் இருந்து 250 கிமீ தொலைவில் ஆதித்யா எல் 1.. இடைவிடாமல் கண்காணிக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள்..
சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1 விண்கலம் ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போது விண்கலத்தின் செயல்பாடுகள அனைத்தும் இயல்பாக இருப்பதாகவும் 3 ஆம் கட்டம் வெற்றிகரமாக பிரிந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்த ஆதித்யா எல் 1 விண்கலம்.. விண்கலத்தின் செய்லபாடுகள் எப்படி உள்ளது?
சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1 விண்கலம் ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. விண்கலம் மூன்றாம் நிலையை அடைந்துள்ள நிலையில், செய்லபாடுகள் திருப்திகரமாக உள்ளது என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சாதனை படைத்த இஸ்ரோ.. விண்ணில் சீறிப்பாய்ந்த ஆதித்யா எல் 1 விண்கலம்..
சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1 விண்கலம் ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து சரியாக காலை 11.50 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.