Krishnagiri : திருமணத்திற்கு மீறிய உறவுக்கு இடைஞ்சல்.. காதலனுடன், கணவனுக்கு விபரீதம் செய்த மனைவி..
கிருஷ்ணகிரி அருகே திருமணத்திற்கு மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை காதலனுடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே பெரிய ஆவேரிப்பள்ளி கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்தின் பின்புறம் முகம் மற்றும் உடலில் மிளகாய் பொடி தூவிய நிலையில் நேற்று முன்தினம் ஆண் சடலம் கிடந்தது. போலீசார் நடத்தியதில் கிடந்தவர் அதே ஊரை சேர்ந்த கட்டிட தொழிலாளி 50 வயதான சின்னப்பா என்பது தெரியவந்தது.
முகம் மற்றும் நெஞ்சு பகுதியில் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது. இது குறித்து சின்னப்பாவின் மனைவி பாஸ்தா மேரியிடம் விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்தது தெரியவந்தது.
பாஸ்தா மேரி வாக்கு மூலம் பற்றி போலீசார் கூறியதாவது: சின்னப்பாவின் மனைவி 35 வயதான பாஸ்தா மேரி கட்டிட சித்தாளாக வேலை செய்து வந்துள்ளார். அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 55 வயதான துரைசாமிக்கும் திருமணத்திற்கு மீறிய உறவு இருந்துள்ளது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இதனை அறிந்த சின்னப்பா, மனைவி மற்றும் துரைசாமியை கண்டித்துள்ளார். இதனால் திருமணத்திற்கு மீறிய உறவுக்கு இடையூறாக இருக்கும் சின்னப்பாவை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டுள்ளனர். அதன் படி சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த சின்னப்பாவை கிராம ஊராட்சி சேவை மையம் முன்பு வழி மறித்த துரைசாமி மற்றும் பாஸ்தா மேரி ஆகிய இருவரும், அவரது முகத்தில் மிளகாய் பொடி தூவி சரமாரியாக கைகளால் தாக்கியுள்ளனர். இதில் கீழே விழுந்த சின்னப்பாவை கயிறு மூலம் கழுத்தை நெரித்து கொலை செய்து, சடலத்தை கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்தின் பின்புறம் போட்டுவிட்டு சென்றுள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பாஸ்தாமேரி மற்றும் துரைசாமியை காவல்துறையினர் கைது செய்து, தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.





















