செயற்கை டிராபிக் ஜாம் ஏற்படுத்தி கடத்தல்காரர்களை பிடித்த கரூர் போலீஸ் - பொதுமக்கள் பாராட்டு
பணியில் இருந்த தலைமை காவலர் குப்புராஜ் மற்றும் முதல் நிலை காவலர் வினோத் குமார் இருவரும் சாலையில் வந்த வாகனங்களை நிறுத்தி செயற்கை டிராபிக் ஜாம் செய்து கடத்தல்காரர்களை பிடித்து விசாரணை.
கரூரில் தூத்துக்குடி குற்றவாளி கைது செய்த நிகழ்வு திரைப்படத்தில் வருவது போலவே நடந்தேறிய ஒரு சுவாரசிய நிகழ்வைப் பற்றிய விரிவான ஒரு ரிப்போர்ட்.
பரபரப்பாக இருக்கும் மதுரை மாவட்டத்தில் இருந்து கரூர் மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு திடீரென அழைப்பு ஒன்று வருகிறது. அந்த அழைப்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து INNOVA காரில் (முதியவர்) கடத்தல் குற்றவாளிகள் தப்பித்து வருவதாகவும், அவர்களை பிடிக்கும்படி, கரூர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து, அங்கிருந்து கொடுக்கப்பட்ட தகவலின்படி அரவக்குறிச்சி காவல் நிலைய சரகம் தேசிய நெடுஞ்சாலை 44, வேளஞ்செட்டியூரில் உள்ள டோல் பிளாசா அருகில் இயங்கி வரும் காவல் சோதனை சாவடிக்கு தகவல் தெரிவித்து அங்கு பணியில் இருந்த முதல் நிலைக்காவலர் ஜாபர் சாதிக், மற்றும் கண்ணன், Gr I 212 கார்த்திக்குமார் ஆகிய போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்த போது INNOVA என்ற வாகனமானது சோதனை சாவடியை கடப்பதாக சோதனைச் சாவடி ஊழியர்கள் தகவல் தெரிவிக்க, மேற்படி காரை நிறுத்திய போது நிறுத்தாமல் தப்பித்தார்கள்.
அரவக்குறிச்சி காவல் சரகம் அரவக்குறிச்சி பிரிவு, தடாகோவில் அருகில் North Crime Petrol முதல் நிலை காவல் அதிகாரி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் டோல் பிளாசா உதவி வாகன ஊழியர்கள் பேரிக்கார்டை வைத்து தடுத்து நிறுத்திய போதும், பேரிக்காடை இடித்து விட்டு நிறுத்தாமல் சென்றவரை அரவக்குறிச்சி ஊரக உட்கோட்ட இரவு ரோந்து ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், பரமத்தி காவல் ஆய்வாளர் அவர்களுடன் துரத்திச் சென்ற போது, கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய சரகம் ஆட்டையாம்பரப்பு அருகில் HWP -05 இல் பணியில் இருந்த தலைமை காவலர் குப்புராஜ் மற்றும் முதல் நிலை காவலர் வினோத் குமார் இருவரும் சாலையில் வந்த வாகனங்களை நிறுத்தி டிராபிக் ஜாம் செய்து 01.20 மணிக்கு கடத்தல் குற்றவாளிகள் ஐந்து பேரை பிடித்தனர்.
பின்னர் தீவிர விசாரணை மேற்கொண்டநிலையில் அவர்கள் 1) பரன்கவுடா துரைராஜ், மங்களூர் கபாப் அருகில் விஜயா நகர், பெங்களூர் (DRIVER), 2) தாஸ் அந்தோணி ராஜ், ராஜ்குமார் கார்டன், 3 rd கிராஸ் பெங்களூர். 3) டேனியல் / O.செப்ரின், I காலனி, பெங்களூர். 4) பவுல் மகாதேவ், NO 6, 2 nd கிராஸ், லட்சுமய்யா லே-அவுட், KK அள்ளி, பெங்களூர். 5) பெரோஸ் கான் 48/22 S/O இஸ்மாயில் கான், NO 17, பார்தி நகர், பெங்களூர் ஆகிய 05 நபர்கள் என தெரிய வந்தது.
மேலும், குற்றவாளிகள் ஐந்து பேரும் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் முதியவரை கடத்தி பணம் பறித்து வந்ததாக விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் அவர்களின் ஆலோசனைக்கிணங்க பிடிப்பட்ட ஐந்து குற்றவாளிகளையும் தூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டி கிழக்கு காவல் ஆய்வாளர் சுஜித் ஆனந்த் தலைமையிலான குழுவரிடம் அதிகாலை 04.20 மணியளவில் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் குற்றவாளிகளை காவல் வாகனத்தில் விசாரணைக்காக தூத்துக்குடி கோவில்பட்டிக்கு அழைத்துச் சென்றனர்.
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் ஆலோசனையின் பேரில் செயற்கை டிராபிக் ஜாம் செய்து தூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டி பகுதியில் இருந்து பெங்களூர் நோக்கிச் சென்ற ஐந்து பேரை பிடித்த செயல், கரூர் மாவட்டம் மட்டுமல்லாது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்கள் பாராட்டையும் கரூர் மாவட்ட காவல்துறை பெற்றுள்ளது என்பது பாராட்டுக்குரியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்