காதலிப்பதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; கரூரில் இளைஞர் கைது
சிறுமியை காதலிப்பதாக கூறி அவரிடம் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடக்க முயன்ற இளைஞர் கைது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிறுமியை காதலிப்பதாக கூறி அவரிடம் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடக்க முயன்ற இளைஞரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கோட்டையார் தோட்டத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் சரவணன். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் திருச்சி தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.
சரவணன் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி காதலித்து வந்த நிலையில், அவர் வீட்டில் தனிமையில் இருந்த போது வீட்டின் சுவர் ஏறி குதித்து சிறுமியிடம் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் தந்தை குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சரவணனை கைது செய்தனர். மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் சரவணனை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்னர் கிளை சிறையில் அடைத்தனர்.